குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல்: கிரிக்கெட் வீரர் ஜடேஜா மனைவி பாஜக வேட்பாளராக போட்டி

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல்: கிரிக்கெட் வீரர் ஜடேஜா மனைவி பாஜக வேட்பாளராக போட்டி

பிரபல கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவபா சோலங்கி, குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார்.

குஜராத் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டமாக டிசம்பர் 1 மற்றும் 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனைப் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில், 182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் பேரவைக்கு முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் 89 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் கட்லோடியா தொகுதில் குஜராத் முதல்வர் பூபேந்திர படேலும், மஜுரா தொகுதியில் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவியும் போட்டியிடுகின்றனர்.

அதேபோல், காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த ஹர்திக் படேல் விரம்கம் தொகுதியில் போட்டியிடுகிறார். பிரபல கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி ரிவாபா சோலாங்கி ஜாம்நகர் வடக்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in