திமுகவில் மாநில மீனவரணித் தலைவராக முன்னாள் எம்.எல்.ஏ இரா.பெர்னார்டு தேர்வான நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர் பேரவைத் தேர்தலில் அவரது பேரன் தலைவராக வெற்றிபெற்றுள்ளார். இது குமரி திமுகவினரை உற்சாகம் அடையவைத்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏவாக இருந்தவர் இரா.பெர்னார்டு. அண்மையில் திமுகவில் மீனவர் அணி நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட போது, பெர்னாடு மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் இவரது பேரன் ஆதித்ராய் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தேர்தலில் தலைவராக வெற்றிபெற்றுள்ளார். நேற்று நடைபெற்றத் தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று நான்காமாண்டு மாணவர் ஆதித்ராய் வென்றார்.
ஆதித்ராயின் தந்தை தமிழ் இனியன் செய்தித்துறை இணை இயக்குநராக உள்ளார். ஒரேநேரத்தில் தாத்தா கட்சிப் பதவியிலும், பேரன் கல்லூரி மாணவர் பேரவையிலும் பொறுப்புக்கு வந்ததால் முன்னாள் எம்.எல்.ஏ பெர்னார்டு வீடு களைகட்டியுள்ளது. தாத்தா பெர்னார்டு மீனவர் அணி நிர்வாகிகளோடு முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப்பெற்றுவிட்ட நிலையில், மாணவர் பேரவைத் தேர்தலில் வென்ற பேரனும் வாழ்த்துப்பெற நேரம் கேட்டுள்ளனர்!