புதுமைப் பெண், காலை உணவுத் திட்டம் விழிப்புணர்வு: அரசுப் பேருந்துகள் மூலம் தமிழக அரசு விளம்பரம்!

புதுமைப் பெண், காலை உணவுத் திட்டம் விழிப்புணர்வு: அரசுப் பேருந்துகள் மூலம் தமிழக அரசு விளம்பரம்!

புதுமைப் பெண், காலை உணவுத் திட்டம் போன்ற அரசின் நலத்திட்டங்களைப் பொதுமக்களுக்குக் கொண்டு செல்லும் வகையில் அரசுப் பேருந்துகளில் விளம்பரப்படுத்தப்பட்டு வருகின்றன.

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் இழப்பு ஏற்படுவதைத் தடுக்க பல்வேறு யுக்திகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. விரைவுப் பேருந்துகளில் பார்சல் அனுப்பும் வசதி, விளம்பரங்கள் மூலம் வருவாயைப் பெருக்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைத் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டியின்போது, அந்த போட்டிகளைப் பிரபலப்படுத்தும் வகையில் அரசுப் பேருந்துகளில் விளம்பரம் செய்யப்பட்டது. அதுபோல் அரசின் மற்ற திட்டங்களைப் பிரபலப்படுத்தும் வகையில் பேருந்துகளில் தற்போது விளம்பரம் செய்யப்பட்டு வருகின்றன.

பெண்கள் உயர் கல்வியைத் தொடரும் வகையில், கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது. பெண்கள் மற்றும் மாணவிகள் தரப்பில் இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதுபோல் தொடக்கப்பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் கடந்த செப்டம்பர் 15-ம் தேதி அரசு தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குக் காலை உணவுத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இந்த திட்டம் இல்லத்தரசிகள் மற்றும் ஆரம்பப் பள்ளி மாணவர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இந்த திட்டம் தொடர்பாகப் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் அரசுப் பேருந்துகளில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளன. பேருந்தின் வெளிப்புறம் முழுவதும் இந்த திட்டங்கள் குறித்து விளம்பரப் படுத்தப்பட்டுள்ளன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in