பாலமேடு ஜல்லிக்கட்டில் உயிரிழந்த வீரர் குடும்பத்திற்கு அரசு வேலை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

பாலமேடு ஜல்லிக்கட்டில் உயிரிழந்த வீரர் குடும்பத்திற்கு அரசு வேலை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் உயிரிழந்த மாடுபிடி வீரரின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்குவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

பொங்கல் விழாவை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று தொடங்கியது. தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போட்டியைத் தொடங்கி வைத்தார். இந்தப் போட்டியில் பங்கேற்கும் அனைத்து காளைகளுக்கும் தங்கக்காசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சிறந்த வீரருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சார்பில் காரும், சிறந்த காளைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் காரும் பரிசாக வழங்கப்பட உள்ளது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 1,000 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதனையொட்டி ஐஜி அஸ்ரா கார்க் மேற்பார்வையில் டிஐஜி பொன்னி, எஸ்பிக்கள் சிவபிரசாத் (மதுரை), பாஸ்கரன் (திண்டுக்கல்), டோங்ரே பிரவின் உமேஷ் (தேனி) ஆகியோர் தலைமையில் 1,500 ஆயிரம் போலீஸார் அலங்காநல்லூரில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இப்போட்டியின் போது தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில்," மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் உயிரிழந்த மாடுபிடி வீரரின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்குவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார்" என்று கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in