ஆளுநரை வெளியேற்றுகின்ற போராட்டங்களை விசிக முன்னெடுக்கும்! - திருமாவளவன் அதிரடி அறிவிப்பு

திருமாவளவன்
திருமாவளவன்

சட்டப்பேரவையில் ஆளுநருக்கு தக்க பதிலடி கொடுத்த முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுடான ஆலோசனைக்கு பின்  செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், ”ஆளுநரின் ஒப்புதல் பெற்ற பிறகு தான் ஆளுநர் உரை சட்டப்பேரவையில் படிப்பதற்கு அச்சிட செல்கிறது. ஆளுநரின் ஒப்புதலோடு அச்சிடப்பட்ட அவரது உரையை அதில் உள்ளவாறு படிக்காமல், சில பகுதிகளையும், வார்த்தைகளையும் தவிர்த்து இருக்கிறார். சிலவற்றை விருப்பம் போல் இணைத்து வாசித்து இருக்கிறார். இது சங்பரிவார்கள் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட செயல் திட்டங்களில் ஒன்று என்றுதான் உணர முடிகிறது. ஆளுநரின் இந்த நடவடிக்கையானது ஏற்றுக் கொள்ள முடியாது ஒன்று.

இதை விரைவாக உணர்ந்து சட்டமன்றத்திலேயே முதலமைச்சர் எதிர்வினை ஆற்றி இருக்கிறார். முதலமைச்சரின் இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பை வெளிப்படுத்தும் வகையில், வரும் 13-ம் தேதி மாலை 3 மணி அளவில் சைதையிலிருந்து ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக புறப்பட்டு முற்றுகை போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஈடுபட இருக்கிறோம்.

இதை விசிக முன்னெடுத்தாலும் அனைத்து ஜனநாயக சக்திகளும் இதில் பங்கேற்க வேண்டும். ஆளுநர் தமிழகம் என்று அழைக்கட்டும், தமிழ்நாடு என்று அழைக்கட்டும். ஆனால், தமிழ்நாடு இலச்சினையை புறக்கணித்தால் ஆளுநரை வெளியேற்றுகின்ற போராட்டங்களை விசிக முன்னெடுக்கும்'' என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in