நாடாளுமன்றத்தில் `தமிழ்நாடு' குறித்து அண்ணாவின் அதிரடி பேச்சு: நினைவுப்படுத்திய சு.வெங்கடேசன் எம்பி

நாடாளுமன்றத்தில் `தமிழ்நாடு' குறித்து அண்ணாவின் அதிரடி பேச்சு: நினைவுப்படுத்திய சு.வெங்கடேசன் எம்பி

தமிழ்நாடு பற்றி ஆளுநரின் சர்ச்சை பேச்சுக்கு அண்ணாவின் உரையை மேற்கோள்காட்டி வெங்கடேசன் எம்பி பேசியுள்ளார்.

தமிழ்நாட்டை,  தமிழகம் என சொல்லவேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவியின் சர்ச்சை பேச்சுக்கு அரசியல் கட்சியினர், சினிமா பிரபலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் சமூக வலைதளங்களிலும் விவாதப் பொருளாகி கருத்து மோதல்கள் தொடர்கிறது. இந்நிலையில், மதுரையில் இன்று நடந்த  மூட்டா மாநாட்டு கருத்தரங்கில் பேசிய சு.வெங்கடேசன் எம்பி, ``சென்னை மாகாணத்தை  தமிழ்நாடு அழைப்பதால் உங்களுக்கு என்ன கிடைத்து விடும் என நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அண்ணா சொன்ன பதில்,  மக்களவையை லோக்சபா என்று அழைப்பதன் மூலம், மாநிலங்களவையை  ராஜ்சபா என்று  அழைப்பதை மூலம், குடியரசுத் தலைவரை ராஷ்டிரபதி என அழைப்பதன் மூலம்  உங்களுக்கு என்ன கிடைக்குமோ, அது போல் தான்  தமிழ்நாடு என அழைப்பதன் மூலம் எங்களுக்கும் கிடைக்கிறது என்று  சொன்னார்'' என்றார்.

Twitter/ PublishCurate a story with Twitter What would you like to embed? Enter a Twitter URL https://twitter.com/SuVe4Madurai/status/1611655866897559552 Get Widget That’s all we need, unless you’d like to set customization options. By embedding Twitter content in your website or app, you are agreeing to the Developer Agreement and Developer Policy. “தமிழ்நாடு” என்று அழைப்பதால் உங்களுக்கு என்ன கிடைக்கிறது? என்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்ட பொழுது அறிஞர் அண்ணா சொன்ன பதில். - மதுரையில் இன்று நடைபெறும் மூட்டா மாநாட்டு கருத்தரங்கில் பேசியது.#தமிழ்நாடு pic.twitter.com/UeLo86mPnB — Su Venkatesan MP (@SuVe4Madurai) January 7, 2023 © 2023 Twitter, IncAboutHelpTermsPrivacyCookiesBlogAdvertiseBusinessesMediaDevelopersTweetDeckPartners

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in