ஆளுநருக்கு டீ செலவு மிச்சமாம்: அண்ணாமலை கிண்டல்

ஆளுநருக்கு டீ செலவு மிச்சமாம்: அண்ணாமலை கிண்டல்

"ஆளுநரின் தேனீர் விருந்தில் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சியினரும் பங்கேற்காதது ஆளுநர் மாளிகைக்கு டீ செலவு மிச்சம்" என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கிண்டல் செய்துள்ளார்.

தமிழ் புத்தாண்டையொட்டி தமிழக அரசியல் கட்சிகளுக்கு தேநீர் விருந்தில் பங்கேற்க ஆளுநர் ஆர்.என்.ரவி விடுத்த அழைப்பை தமிழக அரசு மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணித்தது. மேலும், பா.ம.கவும் ஆளுநர் விருந்தை புறக்கணித்தது. தேனீர் விருந்தில் அதிமுக, பாஜக மட்டுமே பங்கேற்றுள்ளன.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ‘அம்பேத்கர் சித்தாந்தத்தை முழுமையாக பின்பற்றும் கட்சி பாஜக. ஒரு போதும் வன்முறைக்கு, வன்முறைக்கு தீர்வாகாது. ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்டும் அளவில் அமைதியின் வழியில் செல்கிறோம்.

ஆளுநரின் தேனீர் விருந்தில் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சியினரும் பங்கேற்காதது ஆளுநர் மாளிகைக்கு டீ செலவு மிச்சம். ஆளுநர் மசோதாக்களை திரும்ப அனுப்பி விளக்கம் கேட்டுள்ளார். இதனை வெள்ளை அறிக்கையாக வெளியிட திமுக தயாரா? திமுக அரசு தயார் செய்து கொடுத்த ஆளுநர் உரையை அப்படியே ஆளுநர் படித்தார். அப்போது இருந்த மாண்பு இப்போது இல்லையா?’ என்று வினா எழுப்பினார்.

Related Stories

No stories found.