நீண்ட ஆயுளுடன் நிறைந்த ஆரோக்கியத்துடன் வாழ்க: ஸ்டாலினுக்கு ஆளுநர் ரவி பிறந்த நாள் வாழ்த்து

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பிறந்த நாள் வாழ்த்து
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பிறந்த நாள் வாழ்த்துநீண்ட ஆயுளுடன் நிறைந்த ஆரோக்கியத்துடன் வாழ்க: ஸ்டாலினுக்கு ஆளுநர் ரவி பிறந்த நாள் வாழ்த்து

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தனது 70-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். அவரின் பிறந்த நாளுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட திரையுல பிரபலங்களும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், " 70-வது பிறந்தநாள் காணும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நீண்ட ஆயுளுடனும், நிறைந்த ஆரோக்கியத்துடனும் வாழ பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் " என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in