தமிழக அரசின் உரையை வாசிக்க மறுத்த ஆளுநர்... இந்த ஆண்டும் இடையூறு தான்!

தமிழக அரசின் உரையை வாசிக்க மறுத்த ஆளுநர்... இந்த ஆண்டும் இடையூறு தான்!

இன்று கூடிய தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளில்  தமிழக அரசின் உரையை வாசிக்க மறுத்து ஆளுநர் ஆர்.என்.ரவி அமர்ந்து விட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி.
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி.

2024 ம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் இன்று தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.  சபாநாயகர் அப்பாவுவின் வேண்டுகோளை ஏற்று இன்று காலை 9.57 மணிக்கு தலைமைச்செயலகத்திற்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை பேரவை தலைவர் அப்பாவு, துணை தலைவர் பிச்சாண்டி மற்றும் பேரவை செயலர் சீனிவாசன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

பின்னர் காவல்துறையினரின் மரியாதை ஆளுநருக்கு அளிக்கப்பட்டு பேரவைக்கு சிவப்பு கம்பள மரியாதையுடன் அழைத்து வரப்பட்டார். தமிழ்த்தாய் வாழ்த்துடன் அவை தொடங்கியது. அதையடுத்து ஆளுநர் உரையை வாசிப்பதற்காக ஆளுநர் ரவி எழுந்தார். 

நான்  திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டும், தேசிய கீதத்துடன் அவை தொடங்காதது ஏன்? தேசிய கீதம் இல்லாமல் சட்டப்பேரவையை தொடங்கி இருப்பது எனக்கு வேதனை அளிக்கிறது. அத்துடன் ஆளுநர் உரையாக எனக்கு கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் பல பொய்யானவை. உண்மைக்கு மாறான பல தகவல்கள் உள்ளதால் நான் உரையை படிக்க விரும்பவில்லை என்று கூறிவிட்டு ஆளுநர் உரையை படிக்காமல் அமர்ந்தார்.

கடந்தாண்டு போல அவையை விட்டு உடனடியாக வெளியேறாமல் அமர்ந்திருந்ததால் தமிழக சட்டமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in