ஆளுநர் ரவியின் உருவப்படம் புதுச்சேரியில் எரிப்பு: துரத்திக்கொண்டு ஓடிய போலீஸார்!

ஆளுநர் ரவியின் உருவப்படம் புதுச்சேரியில் எரிப்பு: துரத்திக்கொண்டு ஓடிய போலீஸார்!

தமிழ்நாடு ஆளுநர் ரவியை கண்டித்து, புதுச்சேரியில் அவரது உருவப்படத்தை எரித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாடு சட்டசபையில் நேற்று ஆளுநர் உரை மற்றும் அதனைத் தொடர்ந்து நடந்த சலசலப்புகள் மாநிலம் முழுவதும் ஒருவித பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதுமே பல இடங்களில் இன்று ஆளுநருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன. இந்த சூழலில் புதுச்சேரியிலும் ஆளுநருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது.

புதுச்சேரியில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர், ஆளுநர் ரவியின் உருவப்படத்தை செருப்பால் அடித்து, எரிக்க முற்பட்டனர். ஆனால், அவர்களை துரத்துக்கொண்டே ஓடிய போலீஸார், ஆளுநரின் படத்தை வாங்க படாதபாடு பட்டனர். அப்போது ‘எங்கள் நாடு தமிழ்நாடு... ஆளுநரே வெளியேறு’ என்று கோஷமிட்டபடி ஆளுநரின் உருவப்படத்தை தபெதிகவினர் எரித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in