`தமிழகத்தில் ஆளுநர் நடமாட முடியாத நிலை ஏற்படும்'- எச்சரிக்கும் முத்தரசன்

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன்
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன்’’ஆளுநர் ரவிக்கு வாய்க் கொழுப்பு ரொம்ப அதிகம்’’ - இந்திய கம்யூனிஸ்ட் முத்தரசன் காட்டம்!

’’தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு வாய்க்கொழுப்பு ரொம்ப அதிகம், தவறான கருத்துக்களைத் தொடர்ந்து தெரிவித்து வந்தால் தமிழ்நாட்டில் அவரால் நடமாட முடியாத சூழ்நிலை ஏற்படும்’’ என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் எச்சரித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், சட்டமன்ற மேலவை உறுப்பினர் பா.மாணிக்கம் அவர்களின் நூற்றாண்டு விழா அழைப்பிதழை நேரில் சந்தித்து வழங்கினர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முத்தரசன், "சம்பா அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், தவறி பெய்தப் பருவ மழையின் காரணமாக மிகக் கடுமையான அளவில் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழக அமைச்சர்களை அனுப்பி உடனடியாக ஆய்வு மேற்கொண்டு அறிக்கைப் பெற்று அந்த அறிக்கையினை மத்திய ஒன்றிய அரசிற்கு ஈரப்பதம் 22 சதவீதம் வரை கொள்முதல் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். அதற்கு நன்றி'' என்றார்.

தமிழக ஆளுநர் குறித்தக் கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களுக்கு வாய்க் கொழுப்பு அதிகம், கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்பது தமிழக ஆளுநருக்கு பொருத்தமாக இருக்கும். தமிழ்நாடு ஆளுநர் இது போன்ற கருத்துக்களை தெரிவித்து வந்தால் தமிழகத்தில் நடமாட முடியாத நிலை ஏற்படும். காரல் மார்க்ஸ் குறித்து ஆளுநர் பேசியதைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் வருகின்ற 28-ம் தேதி போராட்டம் நடைபெறும்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலைப் பொறுத்தவரையில் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையாக இணைந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிமுகவின் வெற்றித் தோல்வியை தீர்மானிப்பவர் ஈபிஎஸ் அல்ல. மத்தியில் ஆளக்கூடியவர்களே. அதேபோல் சரணாகதி அடைவதில் ரொம்ப கைதேர்ந்த மனிதர் ஈபிஎஸ்’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in