முதல்வர் ஸ்டாலினுக்கு ஃபோன் போட்ட ஆளுநர் ரவி: நடந்தது என்ன?

ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்
ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்முதல்வர் ஸ்டாலினுக்கு ஃபோன் போட்ட ஆளுநர் ரவி: நடந்தது என்ன?

குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெறும் தேநீர் விருந்தில் கலந்து கொள்ளுமாறு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நீட் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காத காரணத்தால் ஏற்கெனவே தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ம் தேதி ஆளுநர் நடத்திய தேநீர் விருந்தைப் புறக்கணித்தன.

இந்த நிலையில், குடியரசு தினத்தனமான நாளை (ஜன.26) மாலை 4.30 மணியளவில் தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நடைபெற உள்ளது. இந்த விருந்துக்கு அரசியல் கட்சித்தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

தமிழக சட்டப்பேரவையின் 2023-ம் ஆண்டிற்கான முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் சமீபத்தில் நடைபெற்றது. அப்போது அறிக்கையில் இருந்த சில வார்த்தைகளை ஆளுநர் ரவி வாசிக்கவில்லை. இதற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். அப்போது சபையில் இருந்து ஆளுநர் வெளிநடப்பு செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த சூழலில் நடக்கும் ஆளுநரின் தேநீர் விருந்தை காங்கிரஸ் கட்சி புறக்கணிப்பதாக அக்கட்சியின் சட்டமன்றக்குழு தலைவர் செல்வப் பெருந்தகை அறிவித்துள்ளார். அதேபோல ஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும் அறிவித்துள்ளார். தமிழக மக்களை அவமதிக்கும் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்சியும் அறிவித்துள்ளது.

இந்த சூழலில் குடியரசு தின தேநீர் விருந்தில் பங்கேற்க வருமாறு முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தொலைபேசியில் இன்று அழைப்பு விடுத்துள்ளார். தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநர் ரவிக்கும் இடையே நடந்து வரும் மோதலில் திடீர் திருப்பதாக ஆளுநர் தொலைபேசியில் அழைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கூட்டத்தில் திமுக பங்கேற்குமா என்று கேள்வி எழுந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in