`மேற்குவங்க ஆளுநரின் செயல் மரபுகளுக்கு எதிரானது'

முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

மேற்கு வங்க சட்டப்பேரவையை முடக்கிய அம்மாநில ஆளுநரின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், "மேற்குவங்க ஆளுநரின் செயல் விதிமுறைகள், மரபுகளுக்கு எதிரானது" என விமர்சித்துள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், அம்மாநில ஆளுநனருக்கு கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த சூழ்நிலையில், மேற்கு வங்களத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடரை நிறுத்துவதாக மாநில ஆளுநர் ஜெகதீப் தன்கார் நேற்று திடீரென அறிவித்தார். ஆளுநரின் இந்த செயல் கடும் விமர்சனத்தை கிளப்பியுள்ளது.

இந்நிலையில் மேற்க வங்க ஆளுநரின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது ட்விட்டர் பக்கத்தில், "மேற்கு வங்க ஆளுநரின் செயல், விதிமுறைகள் மற்றும் மரபுகளுக்கு எதிரானது. ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதை கொடுப்பதில் தான் ஜனநாயகத்தின் அழகு இருக்கிறது. அரசியலமைப்பு சட்டத்தை நிலைநிறுத்த மாநில தலைமையில் இருப்பவர் முன்மாதிரியாக இருக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in