`தமிழக ஆளுநர் அரைவேக்காட்டுத்தனமான அரசியல்வாதியைப் போல இருக்கக்கூடாது’- பாலகிருஷ்ணன் சாடல்!

கே.பாலகிருஷ்ணன்
கே.பாலகிருஷ்ணன்’’தமிழக ஆளுநர் அரைவேக்காட்டுத்தனமான அரசியல்வாதியைப் போல இருக்கக் கூடாது’’ - சிபிஎம் பாலகிருஷ்ணன் சாடல்!

’’தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அரைவேக்காட்டுத்தனமான அரசியல்வாதியைப் போல நடந்துக் கொள்ளக் கூடாது. அவருக்கு மார்க்ஸைப் பற்றி பேச எந்தவிதமான தகுதியும் இல்லை’’ என சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநர் கார்ல் மார்க்ஸை அவமதித்தும், மார்க்சியத்தை கொச்சைப்படுத்தியும் பேசியதாக கூறி சென்னை சைதாப்பேட்டையில் சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில், அக்கட்சியினர் கருப்புக் கொடியை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய கே.பாலகிருஷ்ணன், ‘’தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி , ஆளுநராக மட்டும் நடந்துக் கொள்ள வேண்டுமே தவிர அரைவேக்காட்டுத்தனமான அரசியல்வாதியைப் போல நடந்துக் கொள்ளக்கூடாது. கார்ல் மார்க்ஸ் மற்றும் மார்க்சியத்தைப் பற்றி பேசுவதற்கு ஆர்.என்.ரவிக்கு தகுதியே கிடையாது.

உலகிலேயே தலைச் சிறந்த சிந்தனையாளர் என பிபிசியால் அறிவிக்கப்பட்டுள்ள கார்ல் மார்க்ஸ் மற்றும் மார்க்சியம் இந்தியாவை சிதைத்துவிட்டது என எந்த அடிப்படையில் ஆளுநர் குறிப்பிடுகிறார் என்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம்.

காந்திக்கு முன்பாகவே லண்டனில் இருந்து இந்திய மண்ணிற்கான விடுதலைக்கு அரைக்கூவல் விடுத்தவர் கார்ல் மார்க்ஸ். மார்க்ஸ் மீது ஆர்எஸ் ஸ் அமைப்பிற்கு என்ன கோவம் என்றால் அவர் விடுதலை உணர்வைத்தூண்டிவிட்டார் என்பதுதான்.

ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழகத்தின் எந்த மூலைக்கு சென்றாலும் கம்யூனிஸ்ட் தொண்டர்கள் அவருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டுவார்கள். நல்ல மாட்டிற்கு ஒரு சூடு, நல்லவர்களுக்கு ஒரு சொல் அது ஆளுநருக்கு பொருந்தாது‘’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in