
பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழக அரசின் சின்னத்தை பயன்படுத்த மறுக்கும் ஆளுநர் ரவி, மக்கள் வரிப்பணம், வாடகை வீட்டில் இருந்து வெளியேறுவாரா என வெங்கடேசன் எம்பி ட்வீட் செய்துள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் சமீபத்திய பேச்சு, சட்டமன்ற கூட்ட தொடரில் அவரது செயல்பாடுகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் , 2022 ஏப்.14, தமிழ் புத்தாண்டு ஆளுநர் மாளிகை தேனீர் விருந்து அழைப்பிதழில் தமிழக அரசின் இலட்சினை(லோகோ) இருந்தது. வரும் 12-ம் தேதி சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெறவுள்ள பொங்கல் விழா அழைப்பிதழில் இந்திய அரசின் முத்திரை உள்ளது. இது தொடர்பாக மதுரை எம்பி வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:
கடந்த முறை வந்த அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் இலட்சினை இருந்தது. இந்த முறை வந்துள்ள அழைப்பிதழில் 3 இடங்களிலும் இந்திய அரசின் இலட்சினை மட்டுமே இருக்கிறது. நமது இலட்சினையில் தமிழ்நாடு என்று எழுதப்பட்டுள்ளதால் அதனைப் பயன்படுத்த மறுத்துள்ளார். இதே போல தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்திலிருந்தும், வாடகை வீட்டிலிருந்தும் ரோசப்பட்டு வெளியேறுவார் என்று எதிர்பார்க்கலாமா? என குறிப்பிட்டுள்ளார்.