சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஸ்டாலினா?; விளக்கம் கேட்கும் ஆளுநர்: விடை தரத் தயாராகும் அரசு

சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஸ்டாலினா?;  விளக்கம் கேட்கும் ஆளுநர்: விடை தரத் தயாராகும் அரசு

சித்த மருத்துவப் பல்கலைக் கழகம் அமைப்பதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில், தமிழக அரசிற்கு ஆளுநர் சில கேள்விகளை எழுப்பி இருந்தார். அதற்கு உரிய விளக்கம் அளிக்க தமிழக அரசு தயாராகி வருகிறது.

தமிழகச் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் சித்த மருத்துவ பல்கலைக் கழகம் ஏற்படுத்துவதற்கான சட்ட மசோதாவை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்தார். அந்த மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. சித்த மருத்து பல்கலைக் கழகத்தின் வேந்தராகத் தமிழக முதல்வர் இருப்பார் என அந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் துணை வேந்தர் நியமனத்தைத் தமிழக அரசே செய்யும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. புதிதாக அமையவிருக்கும் சித்த மருத்துவ பல்கலைக் கழகம் சென்னையை அடுத்த மாதவரத்தில் அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆளுநர் மாளிகையிலிருந்து சுகாதாரத்துறை செயலாளருக்கு சில கேள்விகளை எழுப்பி கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் ஓரிரு நாட்களில் இதற்கு விளக்கம் கொடுக்க தமிழக அரசு தயாராகி வருகிறது. நீட் தொடர்பாக மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைத்த போதும், இதே போலக் கேள்விகளை ஆளுநர் எழுப்பி இருந்தார். அதற்கு பிறகும் தொடர்ந்து சில விளக்கங்களை ஆளுநர் கேட்டுவரும் நிலையில், சித்தா பல்கலைக்கழகத்தின் வேந்தராக ஏன் தமிழக முதல்வர் இருக்க வேண்டும், பல்கலைக் கழக துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இருக்கும் பட்சத்தில் அதை மாநில முதல்வருக்கு ஏன் மாற்ற வேண்டும் என்பது போன்ற கேள்விகளை ஆளுநர் எழுப்பியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in