`என்னை அவமதித்தால் அமைச்சர் பதவியை பறித்துவிடுவேன்'- மிரட்டும் கேரள ஆளுநர்

`என்னை அவமதித்தால் அமைச்சர் பதவியை பறித்துவிடுவேன்'- மிரட்டும் கேரள ஆளுநர்

"என்னை அவமதித்தால் அமைச்சர் பதவியை பறித்துவிடுவேன்" என கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் ஆளுநர் கட்சிக்கு மிரட்டல் விடுத்துள்ள பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநரை பயன்படுத்தி ஆளும்கட்சிக்கு மத்திய அரசு மிரட்டல் விடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு, தெலங்கானா, கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆளுநர்கள் தன்னிச்சையாக செயல்படுவதோடு அரசுக்கு கடும் இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றனர். அரசு அனுப்பும் மசோதாக்களை கிடப்பில் போடுவது உள்ளிட்ட பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே அண்டை மாநிலமான கேரளாவில் ஆளுநரின் செயல் ஆளும் கட்சிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. இதனை அம்மாநில அமைச்சர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் என்னை அவமதித்தால் அமைச்சர் பதவியை பறித்து விடுவேன் என்று கேரளா ஆளுநர் ஆரிப் முகமது கான் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஆளுநர் ஆரிப் முகமது கான், "ஆளுநருக்கு ஆலோசனை கூறலாம், விமர்சிக்க முடியாது. விமர்சித்தால் பதவி நீக்கம் செய்யப்படுவார். ஆளுநருக்கு ஆலோசனை வழங்க முதலமைச்சருக்கும் அமைச்சரவைக்கும் முழு உரிமை உண்டு. ஆனால், ஆளுநர் பதவியின் கண்ணியத்தை கெடுக்கும் வகையில் அறிக்கைகள் வெளியிடப்பட்டால், அமைச்சர் பதவியை ரத்து செய்வது உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரித்துள்ளார்.

இந்நிலையில், கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானின் செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், “அமைச்சர்கள் ஆளுநர் அலுவலகத்தின் கண்ணியத்தைக் குறைக்கும் விதத்தில் அறிக்கைகள் வெளி யிட்டால் அது ஆளுநரின் மகிழ்ச்சிக்கு எதிரானது; நடவடிக்கை எடுக்க முடியும் என்று, கேரள ஆளுநர் அலுவல கம் கூறியுள்ளது. இதன் பொருள் ஆளுநர் ஓர் அமைச்சரை ‘டிஸ்மிஸ்’ செய்ய முடியும் என்பதாகும். இத்தகைய சர்வாதிகாரமான அதிகாரங்கள் அரசமைப்புச் சட்டத்தால் ஆளுநருக்கு அளிக்கப்படவில்லை. இத்தகைய அறிக்கைகளை வெளியிடுவதன்மூலம் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், அவருடைய அரசியல் சார்பு நிலையுடன் இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்திற்கு எதிராக இருப்பதை வெளிப்படுத்தி இருக்கிறார். குடியரசுத் தலைவர் இதில் தலையிட்டு, இத்தகைய அரசமைப்புச் சட்ட விரோத, ஜனநாயக விரோத அறிக்கைகளை வெளியிடுவதிலிருந்து கேரள ஆளுநரைத் தடுத்திட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளது.

ஆளுநரின் இந்த செயல் கேரள அரசியலில் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in