பாஜகவின் பிஆர்ஓவாக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார்: துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு

துரை வைகோ
துரை வைகோ

தமிழக ஆளுநர் அதற்குரிய பணியை செய்யாமல் மத்தியில் ஆளும் பாஜகவின் செய்தித் தொடர்பாளராகச் செயல்படுகிறார் என மதிமுகவின் தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ குற்றம் சாட்டினார்.

மதிமுகவின் தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ தென்காசியில் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழகத்தில் பால்விலை உயர்வு குறித்துக் கேட்கிறீர்கள். கால்நடைகளுக்கு தீவனங்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் பால் விலையைக் கூட்டவேண்டும் என கால்நடை வளர்க்கும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று விலையைக் கூட்டியிருக்கலாம். ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலை இருபது ரூபாய்க்கு வாங்குகிறோம்.

ஆளுநர்கள் இந்திய அளவிலேயே ஆளுநராக செயல்படாமல் உள்ளனர். தமிழகத்திலும் ஆளுநர் பொறுப்பேற்றது முதல் பாஜகவின் செய்தித் தொடர்பாளராகவே செயல்படுகிறார். பதவியேற்றது முதல் தன்னிச்சையாக ஜனநாயகத்திற்கு புறம்பாக, சனாதானத்திற்கு ஆதரவாகவே ஆளுநர் பேசிவருகிறார் ”என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in