
உத்தரபிரதேசத்தில் பசுக்கள் கணக்கெடுப்பு நடத்த முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
இந்தியா முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. இந்த நிலையில், உத்தரப்பிரதேசத்தில் பசுக்களைக் கணக்கெடுத்து ஆதரவற்ற நிலையில், உள்ள அவற்றைக் காப்பகத்தில் அடைக்கும் முயற்சியை அரசு ஆரம்பித்துள்ளது.
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் உத்தரவுப்படி, மாநிலத்தில் உள்ள பசுக்கள் மூன்று பிரிவுகளின் கீழ் கணக்கிட முடிவு செய்யப்பட்டுள்ளது. தனியாருக்குச் சொந்தமானவை, அரசுக்குச் சொந்தமான காப்பகங்களில் அடைக்கப்பட்டுள்ள பசுக்கள் மற்றும் தெருவில் திரியும் பசுக்கள் எண்ணிக்கை ஆகியவற்றை கண்டறிய இந்த கணக்கெடுப்பு நடத்த கால்நடை பராமரிப்பு துறை ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் தெருவில் திரியும் கால்நடைகள் பிரச்சினையை டிசம்பர் மாதத்திற்குள் முடிவுக்கு கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளது. கால்நடைகளின் எண்ணிக்கையைக் கண்டறியவும், அதற்கேற்ப நலத்திட்டத்திட்டங்களை வகுக்கவும் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிக்கையில் கூறியுள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
கோடிக்கணக்கில் பணம், தங்கம், வைரம் பறிமுதல்... தெறிக்கவிட்ட தேர்தல் பறக்கும் படை!
அதிர்ச்சி! தவறான சிகிச்சையால் +2 மாணவன் உயிரிழப்பு... மருத்துவர் கைது!
80 வயது முதியவரை 26 வயது இளைஞனாக்கலாம்… விஞ்ஞானிகள் சாதனை!
தேனியில் பரபரப்பு.. கவுன்சிலர்களின் பிச்சை எடுத்து போராட்டம்!
பிக் பாஸ் நிக்சனின் சில்மிஷ வீடியோ... போட்டியாளர்கள் அதிர்ச்சி!