சட்டப்பேரவையில் எம்எல்ஏ புகார்: தனியார் மருத்துவமனைகளுக்கு அமைச்சர் திடீர் எச்சரிக்கை

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்சட்டப்பேரவையில் எம்எல்ஏ புகார்: தனியார் மருத்துவமனைகளுக்கு அமைச்சர் திடீர் எச்சரிக்கை

தமிழக அரசின் மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகள் தாமதப்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன்ஜெயசீலன், நீலகிரியில் அமைக்கப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரி எப்போது முடிவடையும் என்று கேள்வி எழுப்பினார். அத்துடன் தமிழகம் உள்ள மருத்துவமனைகளில் அரசின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் தாமதமாகச் சிகிச்சை அளிக்கப்படுவதாகப் புகார் தெரிவித்தார்.

இதற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்து பேசுகையில், ‘’ மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்பது தான் திமுக அரசின் நோக்கமாக உள்ளது. 2011-ம் ஆண்டு தொடங்கப்பட்ட மருத்துவக் கல்லூரி பணிகள் வரும் ஜூன் இறுதிக்குள்ளாக முடிவடையும்.

கூடலூரில் உள்ள மருத்துவமனை, மாவட்ட அரசு மருத்துவமனையாகத் தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் மருத்துவமனைகளில் அரசின் மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகள் தாமதப்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in