அரசு ஊழியர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை: இலங்கை அரசு திடீர் நடவடிக்கை

அரசு ஊழியர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த  தடை: இலங்கை அரசு திடீர் நடவடிக்கை

அரசு ஊழியர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த இலங்கை அரசு தடை விதித்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டு மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர். அத்துடன் அதிபர் மாளிகைக்குள் புகுந்து தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதன் காரணமாக அதிபர் கோத்தபய ராஜபக்ச உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் வெளிநாட்டிற்குத் தப்பி ஓடினர். கோத்தபய ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் ரணில் விக்ரமசிங்கே இலங்கையின் அதிபராக பொறுப்பேற்றார்.

இந்த நிலையில் ஓய்ந்திருந்த போராட்டம் இலங்கையில் மீண்டும் வெடித்துள்ளது. மாணவ அமைப்பினர் இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் உணவுப்பற்றாக்குறையால் மக்கள் பசி, பட்டினியில் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் அரசு ஊழியர்கள் சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பதிவிட தடை விதிக்கப்பட்டுள்ளது. உணவு பற்றாக்குறை காரணமாக பள்ளிகளில் மாணவர்கள் மயக்கம் அடைந்து வருவதாக மாகாண சுகாதார அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் தெரிவித்து இருந்தனர். இதையடுத்து அரசு ஊழியர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது. ஒரு பொது அதிகாரி சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளிப்படுத்துவது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வழிவகுக்கும் குற்றமாகும் என்று அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in