மாற்றுத்திறனாளிகளுக்கு அதிநவீன தாழ்தளப் பேருந்து - போக்குவரத்துத்துறை முடிவு!

தாழ்தள பேருந்துகள்
தாழ்தள பேருந்துகள்கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை அரசுப் போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தவிர கோவை, மதுரைக்கு தலா 100 தாழ்தள பேருந்துகள் வாங்கப்பட உள்ளன. தாழ்தளப் பேருந்துகளை வாங்குவதற்கான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தில் இருப்பதாக அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு ஒரு வாரத்தில் ஜெர்மன் வளர்ச்சி வங்கியின் அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதலில் 442 தாழ்தளப் பேருந்துகள் வாங்க முடிவு செய்யப்பட்டு ஏலம் நடைபெற்றது. பின் பேருந்துகளின் எண்ணிக்கையை 25 சதவீதம் உயர்ந்து 552 ஆக உயர்த்தப்பட்டது. அதேநேரம், புதிதாக டெண்டர் விடுவதைத் தவிர்க்கவும் தீர்மானிக்கப்பட்டது.

மாநகரப்பேருந்து
மாநகரப்பேருந்து

இதே நிதியுதவியைப் பெற்று 1,771 BS6 டீசலில் இயங்கும் சாதாரண பேருந்துகளை வாங்கவும் டெண்டர் விடப்பட்டது. இதில் 1,614 பேருந்துகள் வாங்கப்பட்டு விழுப்புரத்திற்கு 347 பேருந்துகளும், சேலம் மற்றும் கும்பகோணம் மாநகராட்சிகளுக்கு தலா 303 பேருந்துகளும், மதுரை மற்றும் கோவைக்கு முறையே 251 மற்றும் 115 பேருந்துகளும், திருநெல்வேலிக்கு 50 பேருந்துகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்தப் புதிய சாதாரண பேருந்துகள் நவம்பர் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரும் என போக்குவரத்துத்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவை தவிர மின்சார பேருந்துகளைக் கொள்முதல் செய்து தனியார் நிறுவனங்கள் மூலம் இயக்குவது பற்றியும் தமிழக அரசு பரிசீலித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in