இலங்கையில் சுதந்திரமாக வாழ கோத்தபயவிற்கு வாய்ப்பளிக்க வேண்டும்: மனித உரிமைகள் ஆணையத்திடம் முறையீடு

இலங்கையில் சுதந்திரமாக வாழ கோத்தபயவிற்கு வாய்ப்பளிக்க வேண்டும்: மனித உரிமைகள் ஆணையத்திடம்  முறையீடு

இலங்கையின் முன்னாள் முதற் குடிமகனான கோத்தபய ராஜபக்சவிற்கு சுதந்திரமாக வசிப்பதற்கான வாய்ப்பு வழங்க வேண்டும் என்று மனித உரிமைகள் ஆணையக்குழுவில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் என்பவர் இந்த மனுவை இன்று தாக்கல் செய்தார். அந்த மனுவில், " இலங்கையின் பிரஜையும், முன்னாள் முதற் குடிமகனுமான கோத்தபய ராஜபக்சவிற்கு இலங்கையில் சுதந்திரமாக வசிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

மேலும் ஜூலை 18-ம் தேதி முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறினாரா அல்லது சதி காரணமாக நாடு கடத்தப்படடாரா என கண்டறியக்கோரி போலீஸ்மா அதிபரிடம் முறையிட்டும் தெளிவான விசாரணை மேற்கொள்ளப்படவில்லை" என மனுவில் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் புதிய அதிபர் நியமிக்கப்பட்டதன் பின்னணியில் போராட்டக்காரர்கள் போராட்டத்தில் இருந்து விலகியுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in