சிங்கப்பூரில் தஞ்சமடைந்த நிலையில் அதிபர் பதவியை ராஜினாமா செய்தார் கோத்தபய ராஜபக்ச!

சிங்கப்பூரில் தஞ்சமடைந்த நிலையில் அதிபர்  பதவியை ராஜினாமா செய்தார் கோத்தபய ராஜபக்ச!

இலங்கை அதிபர் பதவியில் இருந்து விலகும் கடிதத்தை சற்று நேரத்திற்கு முன்பு சபாநாயகருக்கு கோத்தபய ராஜபக்ச அனுப்பியுள்ளார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்குக் காரணமான அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலகக்கோரி அந்நாட்டு மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 9-ம் தேதி அதிபர் மாளிகைக்குள் புகுந்து மக்கள் நடத்திய போராட்டம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.

இதனால், அங்கிருந்து தப்பிய கோத்தபய ராஜபக்ச மாலத்தீவிற்கு தப்பிச்சென்றார். இந்த நிலையில் தனது அதிபர் பதவியை ஜூலை 13-ம் தேதி ராஜினாமா செய்வேன் என்று அவர் அறிவித்திருந்தார். இதற்காக அவர் நேற்று சிங்கப்பூர் தப்பிச்செல்ல முயன்றார். ஆனால், அவர் பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து அவர் பயணம் தடை பட்டது.

இந்த நிலையில் மாலத்தீவில் இருந்து இன்று சவுதி விமானம் மூலம் கோத்தபய ராஜபக்ச சிங்கப்பூர் சென்றார். அங்கிருந்து தனது பதவி விலகல் கடிதத்தை சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தனவுக்கு அனுப்பியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in