அமெரிக்கா செல்லவில்லை; துபாய் செல்கிறார்: குடும்பத்துடன் வெளியேறிய கோத்தபய ராஜபக்ச!

tour
அமெரிக்கா செல்லவில்லை; துபாய் செல்கிறார்: குடும்பத்துடன் வெளியேறிய கோத்தபய ராஜபக்ச!

அமெரிக்க குடியுரிமை இல்லாத போதும் குடும்பத்துடன் கோத்தபய ராஜபக்ச அமெரிக்கா பயணமானார்.

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தென் இலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன. மனைவி அயோமா ராஜபக்ச, மகன் மனோஜ் ராஜபக்ச, மருமகள் செவ்வந்தி ராஜபக்ச மற்றும் பேரன் ஆகியோருடன் கோத்தபய ராஜபக்ச நேற்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் வழியாக வெளிநாடு சென்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இலங்கையில் இருந்து துபாய் செல்லும் கோத்தபய ராஜபக்ச உள்ளிட்ட அவரது குடும்பத்தினர், அங்கிருந்து அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்கா செல்லும் முடிவை மாற்றியுள்ள கோத்தபய ராஜபக்ச, துபாயில் தங்கியிருக்க திட்டமிட்டுள்ளதாக கோத்தபய ராஜபக்சவின் சிறப்பு செயலர் சுகீஸ்வர பண்டார சிங்கள முன்னணி ஊடகம் ஒன்றுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in