பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி: பேருந்தில் பயணம் செய்யும்போது அடுத்த நிறுத்தத்தை இனி தெரிந்து கொள்ளலாம்!

பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி: பேருந்தில் பயணம் செய்யும்போது அடுத்த நிறுத்தத்தை இனி தெரிந்து கொள்ளலாம்!

பயணம் செய்யும்போது பேருந்து நிறுத்தத்தை முன்பே அறிவிக்கும் வசதியை போக்குவரத்துறை இன்று தொடங்கியுள்ளது.

சென்னை புறநகர் ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிகளுக்காக அடுத்த ரயில் நிலையம் குறித்த அறிவிப்பு முன்கூட்டியே அறிவிக்கப்படும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த ரயில் நிலையம் என்ன என்பதை பயணிகள் அறிந்து கொள்வதால் இறங்குவதற்கு வசதியாக இருக்கிறது. இதனால் பொதுமக்கள் சிரமமின்றி ரயில்களில் பயணம் செய்து வருகின்றனர்.

அதே நேரத்தில் பேருந்துகளில் இப்படிப்பட்ட வசதிகள் கிடையாது. நடத்துனர் மற்றும் ஓட்டுநரிடம் பேருந்து நிறுத்தத்தை கேட்டு பயணிகள் இறங்கும் நிலை தான் தற்போது வரை இருந்து வருகிறது. ஒரு சில இடங்களில் பயணிகள் பேருந்து நிறுத்தத்தை அறியாமல் வேறு ஒரு பேருந்து நிறுத்தத்தில் இறங்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால் அவர்கள் கடும் அவதிப்படுகின்றனர். தற்போது பயணிகள் படும் அவதியை தமிழக அரசு நிவர்த்தி செய்து இருக்கிறது. அதன்படி பேருந்தில் பயணம் செய்யும்போது அடுத்த நிறுத்தத்தை அறிவிக்கும் வசதியை தமிழக போக்குவரத்துத்துறை இன்று தொடங்கி இருக்கிறது. போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் இந்த விழா நடைபெற்றது. எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் இந்த வசதியை அறிமுகம் செய்து வைத்தார். மேலும் பேருந்தில் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் பயணம் செய்து ஆர்பிஎஸ் தானியங்கி கருவி செயல்படுவதை உறுதிப்படுத்தினர்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் உதயநிதி, சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் கீழ் இயங்கும் பேருந்துகளில், புவிசார்(GPS) நவீன தானியங்கி உதவியுடன் பேருந்து நிறுத்தங்களை 300 மீட்டருக்கு முன்பே அறிவிப்பு செய்யும் புதிய சேவையை, சென்னை மத்திய பணிமனையில் அமைச்சர் சிவசங்கருடன் இன்று தொடங்கி வைத்தோம்" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in