தங்கக்கடத்தல் விவகாரம்: ஸ்வப்னாவிடம் ஒருகோடி நஷ்ட ஈடு கோரும் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர்

எம்.வி.கோவிந்தன்
எம்.வி.கோவிந்தன்தங்கக்கடத்தல் விவகாரம்: ஸ்வப்னாவிடம் ஒருகோடி நஷ்ட ஈடு கோரும் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர்

தங்கக் கடத்தல் வழக்கில் தன் மீது தொடர் குற்றச்சாட்டுக்களைக் கூறிவரும் ஸ்வப்னாவிடம், ஒரு கோடிரூபாய் இழப்பீடு கேட்டு மார்க்சிஸ்ட் கட்சியின் கேரள மாநில செயலாளர் எம்.வி.கோவிந்தன் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

கேரளத்தைச் சேர்ந்த பலர் ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிசெய்கிறார்கள். இவர்களின் வசதிக்காக திருவனந்தபுரத்தில் அரபு அமீரகத்தின் துணை தூதரகம் இயங்கி வருகிறது.  கடந்த 2020 -ம் ஆண்டு இந்த அலுவலகத்துக்கு வந்த பார்சலில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு புகார்வந்தது.

இந்நிலையில், போலி அடையாள அட்டையுடன் அமீரகத்திற்கு அந்தப் பார்சலைப் பெறவந்தார்  தூதரகத்தின் முன்னாள் ஊழியர் ஸரித்குமார். சுங்கப்புலனாய்வுத்துறை அதிகாரிகள் அவரிடம் நடத்திய விசாரணையில்  வெளிவந்த மந்திரப்  பெயர்தான் ‘ஸ்வப்னா சுரேஷ்’.

இதனைத் தொடர்ந்து, பார்சலை விடுவிக்க பெரும்  அழுத்தம் கொடுத்து சிரத்தை எடுத்த ஸ்வப்னா, மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் உள்ளிட்ட பலரும் வரிசையாக இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். இதில் கைதாகி ஜாமீனில் வந்த ஸ்வப்னா சுரேஷ், மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர், கேரள முதல்வர் பினராயி விஜயன், மார்க்சிஸ்ட் கட்சியின் கேரள மாநில செயலாளர் கோவிந்தன் ஆகியோர் மீது தொடர் குற்றச்சாட்டுகளைக் கூறிவருகின்றார். முகநூல் நேரலை மூலம் இந்தக் குற்றச்சாட்டைக் கூறியிருந்தார்.

அதில் முதல்வர் பினராயி விஜயனின் சார்பில் விஜேஸ் பிள்ளை என்பவர் என்னிடம் பேசினார். பினராயி விஜயனுக்கு எதிரான ஆதாரங்களைக் கொடுத்தால் 30 கோடி தருவதாகவும், இல்லாவிட்டால் நடமாட முடியாது எனவும் கூறினார். அதில் கேரள மாநில மார்க்சிஸ்ட் செயலாளர் கோவிந்தன் சொல்லித்தான், தான் சமரசம் பேசுவதாக விஜேஸ் பிள்ளை கூறியதாகக் கூறினார்.

இந்நிலையில் தன்னைப் பற்றி அவதூறு பேசியதற்கு ஸ்வப்னாவுக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கோவிந்தன். அதில் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு அனுப்பியுள்ளார். அதில் ஸ்வப்னா மன்னிப்பு கேட்டாலோ, ஊடகத்தினர் முன்பு இதை மறுத்தாலோ மட்டுமே சட்ட நடவடிக்கையைத் திரும்பப் பெறப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in