'இந்தியாவை சரிசெய்ய கடவுள் ஆம் ஆத்மியை தேர்ந்தெடுத்துள்ளார்' - அர்விந்த் கேஜ்ரிவால்

அர்விந்த் கேஜ்ரிவால்
அர்விந்த் கேஜ்ரிவால்

இந்தியாவை சரிசெய்ய கடவுள் ஆம் ஆத்மி கட்சியை தேர்ந்தெடுத்துள்ளார், ஏழைகளை பணக்காரர்களாக்க வேண்டும் என்பதே எங்களின் குறிக்கோள் என்று ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் கூறினார்.

தேசிய கட்சியாக அங்கீகாரம் பெற்ற பிறகு, ஆம் ஆத்மி கட்சி தனது 11-வது தேசிய கவுன்சில் கூட்டத்தை நடத்தியது. இந்த கூட்டத்தில் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவால் கலந்து கொண்டார். அப்போது பாஜக மீது மறைமுகத் தாக்குதலைத் தொடுத்த கேஜ்ரிவால், “மத்திய ஏஜென்சிகள் மூலம் நாட்டைத் துண்டாட நினைக்கும் கட்சியால் வளர்ச்சியைப் பற்றி சிந்திக்கவே முடியாது. அப்படிப்பட்டவர்கள் நாட்டை 19ம் நூற்றாண்டுக்கு கொண்டு செல்ல விரும்புகிறார்கள்.எனவே இந்தியாவை சரிசெய்ய கடவுள் ஆம் ஆத்மியை தேர்ந்தெடுத்துள்ளார், ஏழைகளை பணக்காரர்களாக்க வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள்" என்று மேலும் கூறினார்.

இந்த சந்திப்பின் போது, ​​கட்சியின் முக்கிய திட்டங்கள் மற்றும் தொலைநோக்கு பார்வை குறித்து முதல்வர் கேஜ்ரிவால் விவாதித்தார். அவர் டெல்லி மற்றும் பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் பற்றி பேசினார். அவர்,"வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பணவீக்கம் போன்ற பிரச்சினைகளை எண்ணம் சரியாக இருந்தால் தீர்க்க முடியும் என்பதை டெல்லி காட்டியுள்ளது. எல்லா மதம் மற்றும் ஜாதி மக்கள் ஒருவரையொருவர் பாசத்துடன் வைத்திருக்கும் நாட்டை நாங்கள் விரும்புகிறோம். மக்கள் ஒற்றுமையாக உழைக்காவிட்டால், நாடு ஒருபோதும் வளர்ச்சி அடையாது. 130 கோடி மக்களும் ஒரு குடும்பம் போன்றவர்கள்" என தெரிவித்தார்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in