இது நியாயமா அய்யாமாரே? அவசரமாய் டெல்லிக்குப் பறந்த இளையராஜா; வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

இளையராஜா
இளையராஜா

டெல்லி நிர்வாக மசோதா தொடர்பாக மாநிலங்களவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் இசையமைப்பாளர் இளையராஜா பங்கேற்றது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. ''இந்த ஒரு ஓட்டுக்காகத் தான் மாநிலங்களவைக்குப் போனீங்களா'' என இளையராஜாவை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

மாநிலங்களவையில் இளையராஜா
மாநிலங்களவையில் இளையராஜா

டெல்லி அரசின் அதிகாரத்தை பறிக்கும் இந்த மசோதா, ஜனநாயகத்திற்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கும் எதிரானது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. சுமார் 8 மணி நேர விவாதத்துக்கு பின், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், டெல்லி நிர்வாக மசோதா குறித்த வாக்கெடுப்பில் இளையராஜா பங்கேற்றதை சமூகவலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர். சரியான நேரம் பார்த்து இளையராஜா மாநிலங்களவை சென்று, மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

இளையராஜா மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்டது கடந்த ஆண்டு ஜூலையில். அதன்பின் நான்கு முறை மாநிலங்களவைக் கூடியுள்ளது அதில் எதிலுமே இதுவரையில் ஒரு நாள் கூட இளையராஜா மாநிலங்களவையில் பங்கேற்கவில்லை. ஒரு கேள்வி கூடக் கேட்டதில்லை. ஆனால் டெல்லி அரசின் அதிகாரத்தைப் பறிக்கும் மசோதாவுக்கு ஓட்டுப் போட மட்டும் நேற்று பங்கேற்றிருக்கிறார்.

‘இது நியாயமா அய்யாமாரே... அரசியல்வாதிகளைப் போல நீங்களுமா இப்படி குத்துவீங்க... உங்க மேல எவ்வளவு மரியாதை வெச்சிருந்தோம்’ என்று டெல்லி வாலாக்கள் சமூக வலைத்தளங்களில் இளையராஜாவின் இந்த செயல் குறித்து புலம்பி வருகின்றனர். அதே சமயம், இங்கிருப்பவர்கள், ‘உங்களுடைய விசுவாசம் எங்களை சிலிர்க்க வைக்கிறது’ என்று இளையராஜாவை வறுத்தெடுத்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in