'இப்போதாவது ஞானம் வந்ததே!': காயத்ரி ரகுராம் முடிவிற்கு திருமாவளவன் பாராட்டு

காயத்ரி ரகுராம்.
காயத்ரி ரகுராம்.

பெண்களுக்கு பாஜகவில் பாதுகாப்பு இல்லையென்று குற்றச்சாட்டை முன்வைத்து நடிகை காயத்ரி ரகுராம் அந்த கட்சியை விட்டு வெளியேறியதை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வரவேற்றுள்ளார்.

நடிகையும், நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம் கடந்த 8 ஆண்டுகளாக பாஜகவில் செயல்பட்டு வந்தார். பாஜகவின் வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் மற்றும் தமிழ் வளர்ச்சி துறை பிரிவின் தலைவராக இருந்த காயத்ரி ரகுராம் சமூக வலைதளங்களில் தீவிரமாக செயல்பட்டு வந்தார். அவர், உட்கட்சி விவகாரங்கள் குறித்து அடிக்கடி ட்விட் செய்து வந்தார். பாஜகவைச் சேர்ந்த டெய்சி, திருச்சி சூர்யா சிவா ஆபாச ஆடியோ வெளியான போது, டெய்சிக்கு ஆதரவாக காயத்ரி ரகுராம் ட்விட் செய்தார்.

இதன் காரணமாக அவரை கட்சியில் இருந்து 6 மாத காலத்திற்கு நீக்கம் செய்து ஜன.3-ம் தேதி பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்தார். இந்த நிலையில், பாஜகவில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லையென்று கூறியதுடன், தலைவர் அண்ணாமலை தலைமையைக் கடுமையாக சாடி காயத்ரி ரகுராம் ட்விட்டரில் நேற்று பதிவிட்டார். அத்துடன் கனத்த மனதுடன் பாஜகவில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார். அத்துடன் அதிமுக, விசிக என எந்த கட்சி அழைத்தாலும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்தால் அந்த கட்சிக்கு சென்று இணைந்து பணியாற்ற தயார் என்றும் காயத்ரி ரகுராம் வெளிப்படையாக அறிவித்திருந்தார்.

திருமாவளவன்.
திருமாவளவன்.

இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், காயத்ரி ரகுராம் பாஜகவில் இருந்து விலகியதை வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில், "பாஜக பெண்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்துக்களுக்கும் பாதுகாப்பற்ற கட்சி என 'வால் பிராணன் தலைக்கு ஏற' கத்திக்கொண்டே தானே இருக்கிறோம்.இப்போதாவது ஞானம் வந்ததே பாராட்டுகள். இந்துக்களின் மத நம்பிக்கையை அரசியல் ஆதாயத்துக்குப் பயன்படுத்தும் கட்சிதான் பாஜக " என பதிவிட்டுள்ளார். திருமாவளவனின் இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in