அதிமுகவுக்கு ஜி.கே.வாசன் மீண்டும் அட்வைஸ்... தேசப்பற்றுடன் முடிவெடுக்க கோரிக்கை!

பிரதமர் மோடியுடன் ஜி.கே.வாசன்
பிரதமர் மோடியுடன் ஜி.கே.வாசன்

மாநில கட்சிகள் நாட்டுப்பற்றோடும் தேசத்தின் நலனில் அக்கறை கொண்டும் முடிவெடுக்க வேண்டிய தருணம் இது என தமாகா தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் உடன் வாசன்
பிரதமர் உடன் வாசன்

பாஜக சார்பில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பேச்சுவார்த்தை குழுவினர் தமாகா தலைமை அலுவலகத்தில் ஜி.கே.வாசன் தலைமையிலான அந்த கட்சியின் நிர்வாகிகளை இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினர். அதன் பின்னர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், "பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்கள் உள்ளோம். பாஜக மூத்த தலைவர்கள் அடங்கிய குழுவினர் எங்கள் அலுவலகத்திற்கு வருகை புரிந்து பேச்சு வார்த்தை நடத்தினர். இது ஆக்கபூர்வமான சந்திப்பாக இருந்தது. தேர்தல் சம்பந்தமாக,  தேர்தல் களப்பணி சம்பந்தமாக,  வெற்றி வியூகம் பற்றி இந்த சந்திப்பில் பேசினோம்.  

ஜி.கே. வாசன்
ஜி.கே. வாசன்

தமாகா சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் மார்ச் 4,5,6 ஆகிய தேதிகளில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தங்கள் கருத்துக்களை கூறலாம் என மாவட்ட தலைவர்களுக்கும் மாநில நிர்வாகிகளுக்கும் சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தியுள்ளோம்.

அவர்கள் தங்கள் கருத்தை இந்த மூன்று நாட்களில் தெரிவிப்பார்கள். அதற்குப் பிறகு பாஜக தேர்தல்  குழுவோடு தமாகா நிர்வாகிகள் பேசி முடிவெடுத்து தேர்தல் சம்பந்தமாக, கூட்டணி வேட்பாளர்கள் மற்றும் தொகுதி எண்ணிக்கை குறித்து பேசுவார்கள்.

இந்தியா முழுமைக்கும் பாஜகவின்  வெற்றிவாய்ப்பு மத்திய அரசின் சாதனைகள் மூலமாக உறுதிப்படுத்தப் பட்டிருக்கிறது. பாஜகவின் சாதனைகளை மனதில் வைத்து வாக்களித்து மூன்றாவது முறையாக நரேந்திர மோடி தலைமையில் பாஜகவை மத்தியிலே அமர வைத்து தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கும் நாட்டின் வருங்கால வளர்ச்சிக்கும் வழி வகுக்க வேண்டும் என்று தமாகா சார்பில் கேட்டுக் கொள்கிறேன். 

அதிமுக - பாஜக கூட்டணி தொடர ஜி.கே.வாசன் சில முயற்சிகளை முன்னெடுத்தார். அதற்காக இரண்டு தரப்பையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், அவரது முயற்சி பலனளிக்கவில்லை. இந்த நிலையில், மீண்டும் ஒரு வாய்ப்பாக மாநிலக் கட்சிகள் தேசப்பற்றுடன் முடிவெடுக்க வேண்டும் என அதிமுகவுக்கு மறைமுகமாக அட்வைஸ் செய்திருக்கிறார் வாசன்.

நாட்டு நலன் கருதி,  மத்தியில் நல்லாட்சி அமைய தேசப்பற்றோடு கூடிய  கட்சிகள்  பாஜக கூட்டணியில் இடம் பெற வேண்டும். மாநில கட்சிகள் நாட்டின் மீது அக்கறை உள்ள கட்சியாக செயல்பட வேண்டிய முக்கிய தருணம் இது. மூன்றாவது முறையாக பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி தொடர நாட்டின் வளர்ச்சி, பாதுகாப்பு தொடர மாநில கட்சிகள் சிந்தித்து செயல்பட்டு நல்ல முடிவுகளை தேசப்பற்றோடு எடுக்க வேண்டும்" என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

இப்படியெல்லாம் வாக்கு சேகரிக்கக்கூடாது... அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!

பெங்களூரு ஓட்டலில் டைமர் வெடிகுண்டு வெடிப்பில் தீவிரவாத சதியா?... என்ஐஏ தீவிர விசாரணை!

கோடிக் கணக்கான இளைஞர்களுக்கு அநீதி இழைக்காதீர்கள்... சு.வெங்கடேசன் எம்.பி கொந்தளிப்பு!

4+1 வேண்டும்... பிரேமலதா பிடிவாதம்: அதிமுக- தேமுதிக கூட்டணி நிலவரம்!

சரசரவென குறைந்த பூண்டு விலை...இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in