'ரேசன்கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும்’: ஜி.கே.வாசன் கோரிக்கை

ஜி.கே.வாசன்
ஜி.கே.வாசன்

விவசாயிகளிடம் இருந்து, நெல்லைக் கொள்முதல் செய்வதுபோல் கொப்பரைத் தேங்காயையும் அரசு ஆண்டு முழுவதும் கொள்முதல் செய்ய வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கும்வகையில் ரேசன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வினியோகிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழகத்தில் ஆண்டுமுழுவதுமே தேங்காய்விளைகிறது. இங்கு விளையும் தேங்காய்களில் 75 சதவீதம் கொப்பரைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, சேலம், கன்னியாகுமரி, ஈரோடு, பல்லடம், திருப்பூர் ஆகிய பகுதிகளில் அதிகளவில் தேங்காய் விளைகிறது. கூட்டுறவுத்துறை, கிராமக் கூட்டுறவு வங்கி, கூட்டுறவு சங்கங்களின் வழியாக அரசு கொப்பறைத் தேங்காயை கொள்முதல் செய்தாலும், இவற்றை ஆண்டுமுழுவதும் செய்வது இல்லை.

இப்போது கொப்பரை தேங்காயின் விலை மிகவும் சரிந்திருப்பதால் கொப்பரை விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும்வகையில் கொப்பரைத் தேங்காய் ஒரு கிலோ 150 ரூபாய்க்கும், உரித்த தேங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும் அரசே கொள்முதல் செய்யவேண்டும். அதேபோல் ரேசன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்கவும் அரசு முன்வரவேண்டும்.

இதேபோல் 12 ரூபாயில் இருந்த ஒரு தேங்காய் நான்கு மாதங்களுக்கு முன்பு 8 ரூபாய் ஆகிவிட்டது. மத்திய அரசு, வரியில்லாமல் பாமாயில் மற்றும் சூரியகாந்தி எண்ணையை இறக்குமதி செய்வதுதான் இதற்க்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. தேங்காய் மற்றும் கொப்பரைத் தேங்காயை ஆண்டுமுழுவதும் அரசே கொள்முதல் செய்யவேண்டும்.”என்று அந்த தெரிவிக்கப்பட்டுள்ளது

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in