முரண்பாட்டின் மொத்த உருவம் ‘இந்தியா’ கூட்டணி... ஜி.கே.வாசன் விமர்சனம்!

ஜி.கே.வாசன்
ஜி.கே.வாசன்

"முரண்பாட்டின் மொத்த உருவம் தான் இந்தியா கூட்டணி. தலைமையில்லாத இந்த கூட்டணியால், நாட்டின் பாதுகாப்புக்கும், வளர்ச்சிக்கும் ஒருபோதும் நம்பிக்கையை அளிக்க முடியாது" என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "இந்தியா முழுவதும் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி பிரகாசமாக உள்ளது. இந்தியா கூட்டணி முரண்பாட்டின் மொத்த உருவமாக உள்ளது. கேரள முதல் அமைச்சர் பினராயி விஜயன், இந்தியா கூட்டணி இல்லை என்று உறுதிப்படுத்தி உள்ளார். இதற்கு காரணம் இது தேர்தலுக்கான ஒரு அமைப்பு என்று தெளிவுபடுத்தி உள்ளார். தலைமையில்லாத முதன்மையான கூட்டணி நாட்டின் பாதுகாப்பிற்கும், வளர்ச்சிக்கும் ஒருபோதும் நம்பிக்கை அளிக்க முடியாது.

இந்தியா கூட்டணி
இந்தியா கூட்டணி

தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. போதை பொருளுக்கு முற்றுப்புள்ளி வைக்க கூடிய அரசாக செயல்பட இந்த அரசு தவறிவிட்டது. சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் தொடர்ந்து சீர்கெட்டு போய்க் கொண்டிருக்கிறது. இளைஞர்கள் தவறான பாதைக்கு சென்று கொண்டிருக்கின்றனர். அரசு விழித்துக் கொள்ள வேண்டும். பள்ளிகள் கல்லூரிகள் துவங்குவதற்கு முன் போதை பொருள் நடமாட்டத்திற்க்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பறவை காய்ச்சலை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் சுகாதாரத்துறை மேற்கொள்ள வேண்டும்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in