பொங்கல் வைக்க பானையும் வழங்க வேண்டும்: இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

பொங்கல் வைக்க பானையும் வழங்க வேண்டும்: இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

பொங்கல் பண்டிகைக்கு கரும்புடன், பானையும் தமிழக அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தி திண்டுக்கல்லில் இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக கடந்த 1989 ஆண்டு திமுக ஆட்சியில் பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, பாசி பருப்பு உள்ளிட்ட பொருட்களுடன் ரூ.100 வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து அதிமுக ஆட்சியில் பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டன. கடந்த 2020, 2021 ல் பொங்கல் பொருட்களுடன் முறையே ரூ2,500 மற்றும் ரூ.1,000 ரொக்கம் வழங்கப்பட்டது. கடந்த பொங்கல் பண்டிகைக்கு பொருட்கள் மட்டும் வழங்கப்பட்டது. ரொக்கம் கொடுக்காததால் மக்கள் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில் 2023-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பச்சரிசி, சர்க்கரை ஆகியவற்றுடன் ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவி்த்துள்ளது.

பொங்கல் பொருள் தொகுப்புடன் முழு நீள கரும்பு வழங்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றன. விவசாயிகளிடம் கரும்பு கொள்முதல், பொங்கல் தொகுப்புடன் மக்களுக்கு கரும்பு வழங்க வேண்டும் எவ விவசாய சங்கங்களும் போராடி வருகின்றன. இந்நிலையில் கரும்பு மட்டும் போதாது, கரும்புடன், பொங்கல் வைக்க மண் பானை வழங்க வேண்டும். ஆயிரம் ரூபாய் என அறிவித்த தொகையை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி திண்டுக்கல்லில் இந்து மக்கள் கட்சியினர் தலையைில் மண் பானை சுமந்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in