கட்சியின் பெயரை அறிவித்தார் குலாம் நபி ஆசாத்: ஜம்மு காஷ்மீர் தேர்தலுக்கு புதிய திட்டம்

கட்சியின் பெயரை அறிவித்தார் குலாம் நபி ஆசாத்: ஜம்மு காஷ்மீர் தேர்தலுக்கு புதிய திட்டம்

காங்கிரஸின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் அக்கட்சியிலிருந்து வெளியேறிய ஒரு மாதத்திற்குப் பிறகு தனது புதிய கட்சியின் பெயரை இன்று அறிவித்தார்.

குலாம் நபி ஆசாத் தனது புதிய கட்சிக்கு ‘ஜனநாயக ஆசாத் கட்சி’ என்று பெயர் சூட்டியுள்ளார். மேலும், அவர் இன்று தனது கட்சியின் கொடியையும் அறிமுகம் செய்தார். தனது கட்சிக்கு நீலம், வெள்ளை, வெளிர்மஞ்சள் வண்ணத்திலான கொடியை அறிமுகப்படுத்தினார் குலாம் நபி ஆசாத். கடலின் ஆழத்தைப் போன்றும் வானின் உயரத்தைப் போன்றும் கட்சியில் சுதந்திரம், வெளிப்படைத் தன்மை, கற்பனை ஆகியவை இருக்க வேண்டும் என்பதை நீல நிறமும், அமைதியை வெள்ளை நிறமும், வேற்றுமையில் ஒற்றுமையை வெளிர் மஞ்சள் நிறமும் குறிப்பதாக அவர் விளக்கம் அளித்தார்.

கட்சியின் பெயரை அறிமுகம் செய்தபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ எங்கள் கட்சியில் சேர வயது வரம்பு இல்லை. இளைஞர்களும் மூத்த உறுப்பினர்களும் இக்கட்சியில் இணைந்து இருப்பார்கள். எனது புதிய கட்சிக்கு சுமார் 1,500 பெயர்கள் உருது மற்றும் சமஸ்கிருதத்தில் எங்களுக்கு பரிந்துரையாக மக்களிடமிருந்து அனுப்பப்பட்டன. இந்த பெயர் ஜனநாயகமாகவும், அமைதியாகவும், சுதந்திரமாகவும் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். ஜம்மு மற்றும் காஷ்மீரில் தேர்தல் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம், எனவே கட்சியை பதிவு செய்வதே எங்கள் முதன்மை பணி. அதனைத் தொடர்ந்து தேர்தலை சந்திக்க திட்டமிடுவோம்” என தெரிவித்தார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in