`இரட்டை தலைமையை ரத்து செய்யுங்கள்: ஒற்றைத் தலைமை வேண்டும்'- பற்றவைத்த சி.வி.சண்முகம்

`இரட்டை தலைமையை ரத்து செய்யுங்கள்: ஒற்றைத் தலைமை வேண்டும்'- பற்றவைத்த சி.வி.சண்முகம்

அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றைத் தலைமை அமைய வேண்டும் என 2190 பொதுக்குழு உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதத்தை பொதுக்குழுவில் வாசித்தார். மேலும் அவரின் வேண்டுகோளுக்கிணங்க அடுத்த பொதுக்குழு நடைபெறும் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழுக் கூட்டம் ஆரம்பத்திலிருந்தே ஓபிஎஸ்ஸுக்கு எதிராகக் கண்டன குரல்கள் ஒலிக்கத் தொடங்கின. வைகைச் செல்வன் உரையாற்றும் போதே குறுக்கிட்ட முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மற்றும் கே.பி. முனுசாமி ஆகியோர், “பொதுக்குழுவில் கொண்டுவரப்பட்ட இந்த தீர்மானங்களை அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் நிராகரித்துவிட்டார்கள். ஒற்றைத் தலைமை வரவேண்டும் என்ற ஒரேயொரு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள். ஒற்றைத் தலைமை தீர்மானத்தோடு இணைத்து தீர்மானம் எப்போது கொண்டு வரப்படுகிறதோ அப்போதுதான் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்” எனத் தெரிவித்தனர்.

”2190 பொதுக்குழு உறுப்பினர்களால் கையொப்பமிட்டுக் கொடுக்கப்பட்டுள்ள பொருளை விவாதிக்க முன்வைக்கிறோம். இரட்டை தலைமையால் கழகத்திற்கு ஏற்பட்டுள்ள பின்னடைவுகள் சங்கடங்கள் நிர்வாக சிக்கல்கள் பற்றியும், ஆளும் திமுக அரசையும், திமுகவையும் பிரதான எதிர்க்கட்சி என்ற முறையால் எதிர்த்துச் செயல்பட முடியாத நிலை உள்ளது. இதனால் கழகத் தொண்டர்கள் நிர்வாகிகளிடையே மிகுந்த ஏமாற்றமும் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. இரட்டைத் தலைமையில் முரண்பாடான செயல்பாட்டால் தொண்டர்களிடையே மிகுந்த சோர்வு ஏற்பட்டுள்ளது. நூறு ஆண்டுக் காலம் ஆனாலும் அதிமுக நிலைத்து நின்று மக்கள் பணியாற்றும் என்ற ஜெயலலிதா ஆசை நிறைவேற்றப்பட வேண்டுமென்றால், ஜெயலலிதாவைப் போன்று வலிமையான ஒற்றைத் தலைமை ஏற்படுத்தப்பட வேண்டும்.

எனவே இந்த பொதுக்குழுவில் இரட்டை தலைமையை ரத்து செய்துவிட்டு பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமைக்குத் தொண்டாற்றுவது சம்பந்தமாக விவாதித்துப் பதிவு செய்ய வேண்டும். இந்த பொதுக்குழுவிலேயே அடுத்த பொதுக்குழுவுக்கான தேதியை முடிவு செய்ய வேண்டும் என அனைத்து பொதுக்குழு உறுப்பினர் சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன். அடுத்துப் பேசிய தற்காலிக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் 11.07.2022 அன்று காலை 9.15 மணிக்கு இதே போல் சிறப்பானதொரு பொதுக்குழு நடைபெறும் எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in