ஈரோடு இடைத்தேர்தலில் எதிர்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளர்: நல்ல யோசனை என்கிறார் டிடிவி தினகரன்

டிடிவி தினகரன் - செய்தியாளர் சந்திப்பு
டிடிவி தினகரன் - செய்தியாளர் சந்திப்புஈரோடு இடைத்தேர்தலில் எதிர்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளர்: நல்ல யோசனை என்கிறார் டிடிவி தினகரன்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எதிர்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது நல்ல யோசனை தான் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் 54-வது நினைவுத் தினத்தை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக கட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட அண்ணாவின் புகைப்படத்திற்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மலர்தூவி மரியாதை செய்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘’ ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வரும் 5-ம் தேதி முதல் எங்களது நிர்வாகிகள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். 10-ம் தேதிக்கு மேல் எங்களது நிர்வாகிகள் கூறியதும் தேர்தல் பிரச்சாரத்திற்காக நான் செல்ல உள்ளேன்.

ஒருசிலரின் சுயநலத்தால் பதவி வெறியால் பணத்திமிரால் தான் 2021 தேர்தலில் திமுக ஆட்சி பொறுப்பிற்கு வந்தது என உங்கள் அனைவருக்கும் தெரியும். தேர்தலில் நான் போட்டியிடவில்லை. என்னைச் சார்ந்த 40 நபர்களுக்கு மட்டும் வாய்ப்புக் கொடுங்கள் என்று என்னிடம் பேசியவர்களிடம் தெரிவித்தேன். அது யாரால் நின்றது என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும்.

அண்ணா நினைவு நாள் - டிடிவி மரியாதை
அண்ணா நினைவு நாள் - டிடிவி மரியாதை ஈரோடு இடைத்தேர்தலில் எதிர்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளர்: நல்ல யோசனை என்கிறார் டிடிவி தினகரன்

எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் நடந்த குளறுபடியால், திமுக திருந்தி இருக்கும் என்று நினைத்து ஆட்சி பொறுப்பை தமிழக மக்கள் அளித்தார்கள். ஆனால் அவர்களும் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. திமுக ஆட்சியால் ஈரோடு மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். அதனால் திமுகவிற்கு எதிரான மனநிலையில் உள்ளனர்.

அம்மாவின் பிள்ளைகள் ஒருங்கிணைந்தால் திமுகவை வீழ்த்த முடியும் என கூறினேன். எங்களுடைய ஜனநாயக கடமையை நாங்கள் ஆற்ற வேண்டும் என்பதற்காக இந்த தேர்தலில் வேட்பாளரை நிறுத்தியுள்ளோம். கடந்த நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் ஆயிரம் ஓட்டுத்தான் வாங்கியுள்ளோம். இருந்தாலும் இடைத்தேர்தலில் திமுகவிற்கு எதிரான மனநிலை உள்ளதால் இந்த முறை நாங்கள் வெற்றிப் பெற வாய்ப்பு உள்ளது.

அம்மாவின் கட்சி தீயவர்களிடம் உள்ளது என்பதை உணர்ந்து அதிமுக தொண்டர்கள் எங்களிடம் வருவார்கள். காலம் எல்லாவற்றிற்கும் பதில் சொல்லும்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எதிர்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளர் நிறுத்துவது நல்ல யோசனை தான். இருந்தாலும் நல்ல படித்த இளைஞர் எங்கள் வேட்பாளர். அவரையே பொது வேட்பாளராக நிறுத்தலாமே?

தீய சக்தி திமுகவை எதிர்க்க எதிர்க்கட்சிகள் ஒரு நல்ல கூட்டணி அமைத்தால் அதைக் கண்டிப்பாக நாங்கள் பரிசீலிப்போம். நான் எடப்பாடி பழனிசாமி போல உச்சத்தில் இருந்து செயல்படுபவன் அல்ல. திமுகவை வீழ்த்துவதற்காக ஓ.பன்னீர்செல்வம் செயல்பட்டால் அவருடன் இணைந்து பேச திறந்த மனதோடு இருக்கிறேன்’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in