`விரைவில் பொதுக்குழு கூட்டம்; டி.டி.வி.தினகரனை சந்திப்பேன்'- ஓபிஎஸ் அதிரடி பேட்டி

`விரைவில் பொதுக்குழு கூட்டம்; டி.டி.வி.தினகரனை சந்திப்பேன்'- ஓபிஎஸ் அதிரடி பேட்டி

விரைவில் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்றும் டி.டி.வி.தினகரனை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் சந்திப்பேன் என்றும் முன்னாள் முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ் அதிரடியாக கூறினார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வத்திடம், கட்சியின் செயற்குழு கூட்டம் நடத்த திட்டம் இருக்கிறதா? என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் விரைவில் நடைபெறும் என்றார். பொதுக்குழு நிர்வாகிகளை நியமித்துள்ளீர்கள். பொதுக்குழு கூட்டம் கூட்டப்பபடுமா? என்ற கேள்விக்கு, மாவட்ட கழக செயலாளர்கள் கூட்டம் முடிந்தவுடன் பொதுக்குழு கூட்டம் விரைவில் நடத்தப்படும் என்றார்.

புதிய மாவட்ட நிர்வாகிகளை நேரில் சந்தித்தால் உற்சாகமாக இருக்குமே என்ற கேள்விக்கு பதில் அளித்த ஓபிஎஸ், அனைத்து மாவட்டத்திற்கும் செயலாளர்கள் அறிவித்தவுடன் அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் உறுதியாக செல்வேன் என்றார். பிரதமரையும், மத்திய உள்துறை அமைச்சரையும் சந்தித்து பேசினீர்கள். அரசியல் காரணம் ஏதாவது இருக்கிறதா? என்ற கேள்விக்கு, பிரதமரை வரவேற்றோம். அரசியல் எதுவும் பேசவில்லை. சென்னையில் நடந்த தனியார் சிமெண்ட் விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினேன். அவரிடம் எந்த விதமான அரசியல் குறித்தும் பேசவில்லை என்றார்.

ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் சந்திப்பேன் என்று டி.டி.வி.தினகரன் கூறி இருக்கிறாராரே என்ற கேள்விக்கு பதில் அளித்த ஓபிஎஸ், ஏற்கெனவே நான் சொல்லி இருக்கிறேன். சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் டி.டி.வி.தினகரனை சந்திப்பேன் என்றார். எடப்பாடி பழனிசாமி மிகப்பெரிய கூட்டணி அமைக்கப்படும் என்றும் கூட்டணியில் டி.டி.வி.தினகரன் கட்சிக்கு ஒரு சதவீதம் கூட வாய்ப்பில்லை என்று கூறியிருக்கிறாரே என்ற கேள்விக்கு பதில் அளித்த ஓபிஎஸ், இதை அவரிடம் தான் கேட்க வேண்டும் என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in