கட்சிக்குத் தொடர்ந்து களங்கம் விளைவித்த நடிகை காயத்ரி ரகுராம் 6 மாதம் சஸ்பெண்ட்: அண்ணாமலை அதிரடி அறிவிப்பு

கட்சிக்குத் தொடர்ந்து களங்கம் விளைவித்த  நடிகை காயத்ரி ரகுராம்  6 மாதம் சஸ்பெண்ட்: அண்ணாமலை அதிரடி அறிவிப்பு

கட்சிக்கு தொடர்ந்து களங்கம் விளைவித்து வந்ததால் பாஜகவிலிருந்து காயத்ரி ரகுராம் 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் தலைவர் நடிகை காயத்ரி ரகுராம் இருந்து வருகிறார். மேலும் அக்கட்சியில் பல்வேறு பொறுப்புகளிலும் அவர் இருந்து வருகிறார்.

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும், நடிகை காயத்ரி ரகுராமிற்கும் ஆரம்பக் காலத்திலிருந்தே கருத்து வேறுபாடு நிலவிவந்தது. இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக தமிழக பாஜக பொறுப்பாளர்கள் பட்டியலை அண்ணாமலை வெளியிட்டிருந்தார். அதில் காயத்ரி ரகுராம் பெயர் இடம் பெறவில்லை. ஆனால் திமுக, அதிமுகவிலிருந்து வந்தவர்களுக்குக் கட்சியில் முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது.

மேலும் கலை, கலாச்சார பிரிவு மாநில தலைவர் பொறுப்பில் இருந்து காயத்ரி ரகுராம் நீக்கப்பட்டு  அப்பதவிக்கு பெப்சி சிவகுமார் நியமனம் செய்யப்பட்டிருந்தார்.

இதனால் அதிருப்தியில் இருந்த காயத்ரி ரகுராம், தனது ட்விட்டர் பக்கத்தில் எனது ஒரே தலைவர் நரேந்திர மோடி ஜி எனக் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் தொடர்ந்து அவர் பொதுவெளியில் தன்னுடைய நிலைப்பாட்டைத் தெரிவித்து வந்தார். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “காயத்ரி ரகுராம் கட்சிக்குத் தொடர்ந்து களங்கம் விளைவித்ததால் பாஜகவில் அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் 6 மாதங்களுக்கு விடுவிக்கப்படுகிறார் ” என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in