காயத்ரி ரகுராமின் ராஜினாமா ஏற்பு: பாஜகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவதாக அறிவிப்பு

காயத்ரி ரகுராமின் ராஜினாமா ஏற்பு:  பாஜகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவதாக அறிவிப்பு

நடிகை காயத்ரி ரகுராமின் ராஜினாமா கடிதத்தை ஏற்று அவரை கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலும் இருந்து நிரந்தரமாக விடுவிப்பதாக தமிழ்நாடு பாஜக தலைமை அறிவித்துள்ளது.

நடன இயக்குநரும், நடிகையுமான காயத்ரி ரகுராம் 8 ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவில் இணைந்து அரசியல் பயணத்தைத் தொடங்கினார். கட்சி நடத்திய பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றதுடன், சமூக வலைதளங்களில் பரபரப்பாக இயங்கி வந்தார்.

பாஜக நிர்வாகியான டெய்ஸி, திருச்சி சூர்யா சிவா ஆபாச ஆடியோ தொடர்பாக சமூக வலைதளத்தில் காயத்ரி ரகுராம் கருத்தைப் பதிவு செய்திருந்தார். இதனால் அவரை பாஜகவில் இருந்து 6 மாதங்களுக்கு நீக்கி மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்தார்.

இந்த நிலையில், அண்ணாமலையின் தலைமையின் கீழ் பாஜகவில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்ற பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்து பாஜகவில் இருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் அதிரடியாக அறிவித்தார். இதுதொடர்பாக கடுமையான அறிக்கையையும் அவர் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் ஒப்பதலின்படி காயத்ரி ரகுராம், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து கட்சி பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக விடுவிக்கப்படுவதாக, பாஜக மாநில தலைமை அலுவலக பொறுப்பாளர் லோகநாதன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," காயத்ரி ரகுராமின் ராஜினாமாவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஏற்றுக்கொண்டதாகவும், அவரது ஒப்புதலின்படி காயத்ரி ரகுராமை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து கட்சிப் பொறுப்புகளிலிருந்தும் நிரந்தரமாக விடுவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், காயத்ரி ரகுராமின் எதிர்கால முயற்சிகளும், பணிகளும் வெற்றியடைய வாழ்த்துக்கள்" என்றும் அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in