
தேசத்திற்கும் கட்சிக்கும் சேவை செய்து வரும் ஹெச்.ராஜாவுக்கு, பத்மஸ்ரீ அல்லது பத்ம பூஷன் விருது வழங்க வேண்டுமென நடிகை காயத்ரி ரகுராம் பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
தேர்தல் அரசியலிலிருந்து ஒதுங்க உள்ளதாக அறிவித்து தனது ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார் பாஜகவின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா. அவரின் இந்த அறிவிப்புக்கு சமூக வலைதளங்களில் பலரும் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் நடிகை காயத்ரி ரகுராம் ஹெச்.ராஜாவுக்கு ஆதரவாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘’ஹெச்.ராஜா அண்ணா தேர்தல் அரசியலிலிருந்து ஓய்வு பெற்றாலும், தேசத்துக்கும் கட்சிக்கும் சேவை செய்துள்ளார். அவர் விருதுக்குத் தகுதியானவர்.
குறிப்பாக அவர் பல ஆண்டுகளாக இந்துக்களுக்கு ஆதரவாக இருந்துள்ளார். அதனால் அவருக்குப் பத்மஸ்ரீ அல்லது பத்மபூஷன் விருது அளித்து, ஹெச்.ராஜா அண்ணாவைக் கௌரவிக்க மரியாதைக்குரிய பிரதமரை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். ஹெச்.ராஜா அண்ணா, உங்கள் தேசத்திற்கான சேவை தொடர எனது வாழ்த்துக்கள்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
காயத்ரி ரகுராமின் இந்த கருத்திற்கு இணைய வாசிகள் அவர்களுக்குரிய பாணியில் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.