சபரீசனை சந்தித்தது ஏன்?- பாஜக நிர்வாகி எழுப்பிய கேள்விக்கு காயத்ரி ரகுராம் பதில்

சபரீசனை சந்தித்தது ஏன்?- பாஜக நிர்வாகி எழுப்பிய கேள்விக்கு காயத்ரி ரகுராம் பதில்

மூன்று மாதங்களுக்கு முன்பாக சோமர்செட் நட்சத்திர விடுதியில் காயத்ரி ரகுராம்- சபரீசன் ஆகியோர் ஒரு மணிநேரம் சந்தித்துப் பேசிக்கொண்டனர் என அமர்பிரசாத் ரெட்டி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் தலைவர் நடிகை காயத்ரி ரகுராம் கட்சிக்குக் களங்கம் விளைவித்ததாக கூறி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவரை 6 மாதம் சஸ்பெண்ட் செய்தார். இதற்குப் பதில் அளிக்கும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகை காயத்ரி ரகுராம், "6 மாதங்களுக்கு கட்சியிலிருந்து என்னை நீக்கியுள்ளதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் என்னை நேசிப்பவர்கள் என்னிடம் பேசுவார்கள். அதை யாராலும் தடுக்க முடியாது. இடைநீக்கம் செய்தாலும் தேசத்திற்காக உழைப்பேன்" என்று பதிவிட்டுள்ளார். மேலும் பாஜகவில் நடைபெறும் உட்கட்சி அரசியல் குறித்து பொதுவெளியில் பேசி வருகிறார். இந்நிலையில் காயத்ரி ரகுராமுக்கும், பாஜக நிர்வாகியான அமர்பிரசாத் ரெட்டிக்கும் ட்விட்டரில் மோதல் வெடித்துள்ளது.

அமர்பிரசாத் ரெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில், “கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக சோமர்செட் நட்சத்திர விடுதியில் காயத்ரி ரகுராம்- சபரீசன் ஆகியோர் சந்தித்துக் கொண்டனர். சுமார் ஒரு மணிநேரத்திற்கு இந்த சந்திப்பு இருந்தது. துரோகிகளுக்கு பாஜகவில் இடம் இல்லை” எனப் பதிவிட்டுள்ளார். அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, “நான் என்னுடைய தோழியின் பிறந்தநாள் விழாவிற்குச் சென்றிருந்தேன். அவள் என்னையும், பேஷன் துறையில் உள்ள சிலரையும் அழைத்திருந்தாள். அப்போது நடந்த சந்திப்பு எதேச்சையானது” என காயத்ரி ரகுராம் தெரிவித்திருக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in