
நடிகை கெளதமியின் அறிக்கை பார்த்தவுடன் மிகவும் கஷ்டமாக இருக்கிறது. நிச்சயமாக கட்சிக்காரர்கள் சட்டத்திற்கு புறம்பாக போய் யாரையும் பாதுகாக்க போவதில்லை, அவர் முழுமையாக சொல்லி இருக்கலாம் என கெளதமி விலகல் குறித்து வானதி சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார்
தனது சொத்துக்களை அபகரித்தவரை பாஜக பாதுகாப்பதாக கூறி இன்று நடிகை கௌதமி பாஜகவில் இருந்து விலகி உள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கெளதமி விலகல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், ’’கடந்த 10 நாட்களுக்கு முன்னதாக கௌதமியின் உதவியாளர் ஏதோ ஒரு வழக்கு தொடரப்பாக எனக்கு மெசேஜ் அனுப்பி இருந்தார். கட்சியில் எனக்கு உதவி வேண்டும் என்று. கட்சியில் இருந்து ஒரு சிலரை பாதுகாப்பதாக கௌதமி கூறியிருந்தார்.
முழுமையாக தகவல்கள் எங்களுக்கு தெரியவில்லை. முழுமையான தகவல் கொடுங்கள் என்று நான் உதவி செய்கிறேன் என்று தான் நானும் சொல்லியிருந்தேன். ஆனால் அவர்களின் அறிக்கை பார்த்தவுடம் ரெம்ப கஷ்டமாக இருக்கிறது. நிச்சயமாக கட்சிக்காரர்கள் சட்டத்திற்கு புறம்பாக போய் யாரையும் பாதுகாக்க போவதில்லை. அவர் மாநிலத்தலைவரிடமோ, எங்களிடமோ அந்த பிரச்சினை என்ன என்பதை இன்னும் முழுமையாக சொல்லியிருந்தால் எங்களுக்கு உதவி பண்ண வாய்ப்பாக இருந்திருக்கும் .
ஒரு மாநில அரசு புகார் கொடுக்கும் அவர் பா.ஜ.கவில் இருந்த காரணத்தினால் புகார் எடுக்கவில்லை என்றும் இன்று கட்சியை விட்டு விலகிய பிறகு புகாரை ஏற்றுக் கொண்டதாகவும் கூறினார். மீண்டும் கௌதமிக்கு உதவி செய்ய தயாராக இருப்பதாகவும் அவர் கேட்டால் உதவி செய்து தருவேன்’’ என்றார்.