கையும் களவுமாக சிக்கிய அதிமுக அம்மா பேரவை செயலாளர்: அதிர்ச்சி காரணம்!

கையும் களவுமாக சிக்கிய அதிமுக அம்மா பேரவை செயலாளர்: அதிர்ச்சி காரணம்!

ஆத்தூரில் அதிமுக அம்மா பேரவை செயலாளரை காவல்துைறையினர் கையும் களவுமாக பிடித்து சிறையில் அடைத்துள்ளனர்.

கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிக்க தமிழக காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இருந்தாலும், கஞ்சா புழக்கம் இருந்து கொண்டேதான் இருக்கிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வாலிபர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கஞ்சா விற்பனைக்கு அரசியல் கட்சியை சேர்ந்தவர்களே முக்கிய காரணியாக இருக்கின்றனர். கஞ்சாவை வீடு தேடி விற்பனை செய்த அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், ஆத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீஅபினவுக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இதையடுத்து, ஆத்தூர் உடையார்பாளையம் பகுதியில் காவல்துறையினர் நேற்று ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, பைக்கில் வந்த வாலிபர் ஒருவர் கஞ்சா பொட்டலங்களை டோர் டெலிவரி செய்து கொண்டிருந்தார். இதையடுத்து, அந்த நபரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர். அவரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். கைது செய்யப்பட்ட வாலிபர் நரசிங்கபுரம் நகராட்சி 16-வது வார்டு அதிமுக அம்மா பேரவை செயலாளர் ரமேஷ் என்பது தெரியவந்தது. இவர், வாட்ஸ் அப் மூலம் கஞ்சா பொட்டலங்களை ஆர்டர் எடுத்து, அதனை கேட்கும் நபர்களுக்கு நம்பர் பிளேட் இல்லாத பைக்கில் சென்று டோர் டெலிவரி செய்து வந்தது தெரியவந்துள்ளது. ரமேஷிடம் இருந்த 40 கிலோ கஞ்சா மற்றும் பைக்கை காவல்துறையினர் பறிமுதல் செய்து அவரை சிறையில் அடைத்தனர்.

அதிமுக பிரமுகர் ஒருவரே கஞ்சா விற்பனை செய்து சிக்கிக்கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in