மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரனுக்குத் தடை! தடுத்து நிறுத்திய போலீஸார்!

காந்தியின் கொள்ளுப் பேரன்
காந்தியின் கொள்ளுப் பேரன்துஷார் காந்தி

’வெள்ளையனே வெளியேறு’ நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்ற மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தியை போலீஸார் தடுத்து நிறுத்தி, காவலில் வைத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரனான துஷார் காந்தி, மும்பையில் நடந்த ’வெள்ளையனே வெளியேறு’ நாள் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு மும்பை காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

கிராண்ட் ரோடு புறநகர் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள கோவாலியா டேங்க் மைதானம் என்று அழைக்கப்படும் ஆகஸ்ட் கிராந்தி மைதானத்தில் ஆண்டுதோறும் 'வெள்ளையனே வெளியேறு’ நினைவு நாள் நிகழ்வு நடத்தப்படுகிறது. இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சென்ற போது துஷார் காந்தி, போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டு, காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சுதந்திர இந்திய வரலாற்றில் முதன்முறையாக ஆகஸ்ட் 9, ‘வெள்ளையனே வெளியேறு இயக்கம்’ நினைவு தினத்தை முன்னிட்டு வீட்டை விட்டு வெளியேறிய நான் சாண்டா குரூஸ் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டேன். எனது கொள்ளு தாத்தாவும், அப்பாவும் கூட பிரிட்டிஷ் காவல்துறையினரால் வரலாற்று சிறப்பு மிக்க இதே நாளில் கைது செய்யப்பட்டதில் நான் பெருமைப்படுகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

பின்னர் சான்டாகுரூஸ் காவல் நிலைய போலீஸார் அவரை விடுவித்தனர். அரசாங்கத்தின் புதிய பிரச்சாரமான ’மேரி மாத்தி, மேரா தேஷ்’ கிராந்தி மைதானத்தில் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர்கள் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் அஜித் பவார் ஆகியோரால் தொடங்கப்பட்டது. இதன் காரணமாகவே மைதானத்தில் சில மணி நேரம் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in