'வருங்கால முதலைமைச்ரே’: அண்ணாமலையை வரவேற்று வைக்கப்பட்ட பாஜக ஃபிளக்ஸ் வைரல்

'வருங்கால முதலைமைச்ரே’:  அண்ணாமலையை வரவேற்று வைக்கப்பட்ட பாஜக  ஃபிளக்ஸ் வைரல்

மதுரையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை வரவேற்று வைக்கப்பட்ட ஃபிளக்ஸ் பேனர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிரதமர் மோடி நாளை முதல் தென் மாநிலங்களுக்கு 2 நாள் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளார். அவருக்கு வரவேற்பு கொடுப்பது தொடர்பாக மதுரை வாடிப்பட்டி அருகே சாணம்பட்டி பகுதியில் பாஜகவினரின் ஆலோசனைக் கூடடம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.

அவரை வரவேற்க, வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய பாஜக நிர்வாகிகள் வைத்த ஃபிளக்ஸ் தான் தற்போது சமூக வலைதளங்களில் நெட்டிசன்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது. அந்த ஃபிளக்ஸ் பேனரில்," வாடிப்பட்டிக்கு வருகை தரும் வருங்கால முதலைமைச்ரே வருக வருக" என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. முதலமைச்சரே என்பதை முதலைமைச்ரே என்ற பிழைகளுடன் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in