4 பேர் திடீர் மரணம்... அனைத்து கவுன்சிலர்களுக்கு முழு உடல் பரிசோதனை...மேயர் பிரியா அறிவிப்பு!
சென்னை மாநகராட்சி உறுப்பினர்கள் நான்கு பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதையடுத்து அனைத்து மாமன்ற உறுப்பினர்களுக்கும் விரைவில் முழு உடல் பரிசோதனை செய்யப்படும் என்று மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
பெருநகர சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டம் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது. தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியுடன் தொடங்கிய கூட்டத்தில், மேயர் பிரியா, மறைந்த மாமன்ற உறுப்பினர் சரஸ்வதிக்கு இரங்கல் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து கட்சிகளின் தலைவர்கள் மறைந்த 59-வது வார்டு உறுப்பினர் சரஸ்வதிக்கு இரங்கல் தெரிவித்தனர். முன்னதாக பேசிய மேயர் பிரியா, மக்கள் பணி செய்துவரும் மாமன்ற உறுப்பினர்கள் அவர்களது உடல்நலத்தை பார்த்துக் கொள்வதில்லை என்றார்.
எனவே, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் ஆலோசித்து சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், மாநகராட்சியில் இருக்கும் 196 உறுப்பினர்களுக்கும் முழு உடல் பரிசோதனை செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதையடுத்து நாளைக்கு மாமன்ற கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக, 122-வது வார்டு திமுக கவுன்சிலர் ஷிபா வாசு, 165-வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் நாஞ்சில் பிரசாத் ஆகியோர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தனர். கடந்த 146-வது வார்டு திமுக கவுன்சிலர் ஆலப்பாக்கம் சண்முகம் மாரடைப்பால் காலமானார். இதனைத் தொடர்ந்து, 59-வது வார்டு திமுக கவுன்சிலர் சரஸ்வதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
300 பேரைக் காணவில்லை... பெட்ரோல் மையத்தில் பயங்கர வெடிவிபத்து... பலி எண்ணிக்கை 68 ஆனது!
அதிர்ச்சி.... 7-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை!
ரூ.1.70 கோடி ஏமாற்றி விட்டார்... கட்டிடப் பொறியாளர் மீது நடிகர் பாபி சிம்ஹா பரபரப்பு புகார்!
வைரலாகும் புகைப்படம்... 'மாமன்னன்' பாணியில் அவமானப்படுத்தினாரா அமைச்சர் பொன்முடி?
அடேயப்பா... பிக் பாஸ் இந்த சீசனில் கமல்ஹாசனின் சம்பளம் 130 கோடி!