அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி ஆக்‌ஷன்

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி ஆக்‌ஷன்

தமிழ்நாடு மீன் வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

தமிழக மீன்வளத்துறை, மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராக இருப்பவர் அனிதா ராதாகிருஷ்ணன். அத்துடன் திமுக தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளராகவும் உள்ளார்.

இவர் திருச்செந்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து 2001 ,2006 ஆகிய ஆண்டுகளில் அதிமுக சார்பிலும், 2010 மற்றும் 2011, 2016, 2021 ஆகிய தேர்தல்களில் திமுக சார்பிலும் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவராவார். கடந்த 2009-ம் ஆண்டு அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார்.

இந்நிலையில் தமிழ்நாடு மீன் வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கடந்த 2001 - 2006-ம் ஆண்டு காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் 6.5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in