இலவச சிலிண்டர்கள் - ரூ.10 லட்சத்துக்கு இன்சூரன்ஸ்: பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு

குஜராத் நிதி அமைச்சர் கனு தேசாய்
குஜராத் நிதி அமைச்சர் கனு தேசாய்இலவச சிலிண்டர்கள் - ரூ.10 லட்சத்துக்கு இன்சூரன்ஸ்: பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு

குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான மாநில அரசு ரூ.3.01 லட்சம் கோடிக்கான பட்ஜெட்டை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தது. இதில் வீடுகளுக்கு 2 இலவச சிலிண்டர்கள் மற்றும் மருத்துவக்காப்பீட்டை ரூ.10 லட்சமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநில நிதி அமைச்சர் கனு தேசாய் 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான புதிய பாஜக அரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இதுவாகும். இந்த பட்ஜெட்டில் பல புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில பாஜக தனது தேர்தல் அறிக்கையில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளாகும்.

புதிய பட்ஜெட்டில், தகுதியான குடும்பங்களுக்கு பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய-மா அமிர்தம் யோஜனா திட்டத்தின் கீழ் ஆண்டு காப்பீட்டு வரம்பை ரூ.10 லட்சமாக இரட்டிப்பாக்க அறிவிக்கப்பட்டது. மேலும், உஜ்வாலா திட்டத்தின் கீழ் குடும்பங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் இரண்டு சமையல் கேஸ் சிலிண்டர்கள்

இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் பட்ஜெட்டில் புதிய வரி விதிக்கும் திட்டம் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியை (ஜிஎஸ்டிபி) ரூ.42 லட்சம் கோடியாக உயர்த்த மாநில அரசு இலக்கு வைத்துள்ளதாக நிதி அமைச்சர் தேசாய் கூறினார். அடுத்த 5 ஆண்டுகளில் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக குஜராத் அரசு சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் செலவழிக்கும் என்றும் அவர் அறிவித்தார். இது தவிர, குஜராத்தில் ரூ.1,500 கோடி செலவில் ஐந்து நெடுஞ்சாலைகள் அதிவேக வழித்தடங்களாக உருவாக்கப்படும். பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (நகர்ப்புறம்) திட்டத்தின் கீழ் சுமார் ஒரு லட்சம் பேருக்கு வீடுகள் கட்ட குஜராத் அரசு அடுத்த ஆண்டு 1,066 கோடி ரூபாய் செலவழிக்கும் என்று அவர் தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in