பெண்களுக்கு இலவச பேருந்து பயணம்: யோகி ஆதித்யநாத் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்
உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்

ரக்‌ஷாபந்தன் பண்டிகையையொட்டி உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெண்கள் 48 மணி நேரம் இலவச பேருந்து பயணத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

ரக்‌ஷாபந்தன் பண்டிகையையொட்டி உத்தரப்பிரதேச மாநிலப் போக்குவரத்துக் கழகம், மாநிலத்தின் அனைத்துப் பெண்களும் பாதுகாப்பான பயணத்திற்காக பேருந்துகளில் இலவச பயண வசதியை வழங்கும் என்று முதல்வர் யோகியின் அலுவலகம் ட்வீட் செய்துள்ளது. ரக்‌ஷாபந்தன் பண்டிகையை முன்னிட்டு அம்மாநில பெண்களுக்கு முதல்வர் யோகி அளித்த பரிசு இது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் மூலமாக ஆகஸ்ட் 10 நள்ளிரவு தொடங்கி ஆகஸ்ட் 12 நள்ளிரவு வரை பெண்கள் 48 மணிநேரம் மாநிலம் முழுவதும் இலவசமாகப் பேருந்து பயணம் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.

வட இந்தியாவில் மிகவும் பிரபலமான இந்து பண்டிகைகளில் ஒன்றான ரக்‌ஷாபந்தன், சகோதரத்துவத்தின் பிணைப்பை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் விழாவாகும். பாரம்பரியமாக இந்த நாளில் சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் கைகளில் ராக்கிகளைக் கட்டி பரிசுகளை பரிமாறிக்கொள்வார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in